வாதுவ மொல்லிகொட பிரதேசத்தில் இன்று (04) இடம்பெற்ற

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை அறுத்து பலத்த காயமடையச் செய்த நபரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வாதுவ, மொல்லிகொட  பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில காயமடைந்தவராவார்.
 
சந்தேக நபர் கண்ணாடி போத்தலை உடைத்து மனைவியின் கழுத்தில் தாக்கியதாகவும் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
 அவரைக்க் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர். இருப்பினும் சந்தேக நபரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி