இலங்கை மத்திய வங்கி புழக்கத்துக்குப் பொருத்தமற்ற

சுமார் 80 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களை கடந்த வருடம் (2023)  எரித்து அழித்துள்ளது.

 மத்திய வங்கியின்  நிர்ணயத் தகுதி நியமங்களுக்கு இணங்காத 79.82 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.
 
 மத்திய வங்கி கடந்த வருடம் 250 மில்லியன் புதிய நாணயத்தாள்களை பெற ஏற்பாடு செய்திருந்தது.
 
இதன்படி 469.28 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களும் 571.95 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களும் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன.
 
 மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டில் நாணய சுழற்சி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
 கடந்த 2022ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக இருந்த பணப்புழக்கத்தின் வளர்ச்சி 2023ஆம் ஆண்டுக்குள் 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 
அதன்படி, கடந்த ஆண்டு (2023) நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு 1,186.5 பில்லியன் ரூபாய்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி