“ஜாதிப பல வேகய” வின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள தமது கட்சியின் மத்திய குழு, தான்

தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாகவும் “ஐக்கிய இடதுசாரி முன்னணி” யின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய இடதுசாரி முன்னணி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் வெளியான ஊடகச் செய்திகள் மீது என் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக பலவேகய வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்காவுக்கு ஆதரவை வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்ட அதே நேரம் கோத்தாபய ராஜபக்ஷவின் சர்வாதிகார அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கும் எமது கட்சியின் ஆதரவாளர்களிடத்திலும், நாட்டு மக்களிடத்திலும் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி