கோத்தாபய ராஜபக்ஷவின் “கொட்டோ” க்களால் மீண்டும் இனவாத கலவரங்களை ஏற்படுத்தி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியல் இலாபம்

அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தரை, கிரிந்த , புகுல்வெல்ல பிரதேசத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று (27) மாலை ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். தற்போது பிரதேசத்தில் பாதுகாப்புக்காக விஷேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.

கலவரத்திற்கான காரணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பிரதேசத்தின் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பின்னர் குறித்த பிரதேசத்தில் பிரதேச சபைத் தலைவரின் அடியாள் ஒருவருக்கும் பட்டாசு கொளுத்திய முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாய்த்தர்க்கத்தின் போது முஸ்லிம் இளைஞர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி பிரதேச சபைத் தலைவரின் அடியாள் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இங்கு தாக்குதல் மேற்கொண்ட இளைஞரை உடன் கைது செய்யுமாறு தாமரை மொட்டு கட்சியின் பிரதேச பிரமுகர் மாத்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வந்துள்ளார். இதனிடையே ராஜபக்ஷவாதிகளின் அதிகாரக் கோட்டையான அப்பிரதேசத்தின் விகாரை ஒன்றில் நேற்று மாலை இளைஞர்கள் ஒன்று கூடி முஸ்லிம் இளைஞரை உடன் கைது செய்யக் கோரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் யாரோ ஒருவர் விகாரையினுள் பியர் போத்தல் ஒன்றை வீசியெரிந்துள்ளார்.

அதன் பின்னரே அப்பிரதேசத்தில் அமைதியின்னைம ஏற்பட்டுள்ளதோடு, பொலிஸார் உடன் செயற்பட்டு நிலைமையைக் கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

கொட்டாக்களின் குரோத நடவடிக்கைகள்

பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்த போது ராஜபக்ஷவாதிகளின் சமூக வலைத்தளங்கள் இச்சம்பவத்தைப் பெரிது படுத்தி மாத்தறை பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி மக்களை தூண்டிவிடும் செயற்பாட்டில்  ஈடுபட்டன. ராஜபக்ஷவாதிகளின் ஒரு சமூக வலைத்தளத்தில், வாள்களுடனான முஸ்லிம் இளைஞர்கள் விகாரையினுள் நுழைந்ததையடுத்தே அப்பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கு உடன் பதிலளித்த  matarakimbula.com  செய்தி இணையத்தளத்தின் ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா நெத்தசிங்க தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையிடடுள்ளார்.

“இந்துல் மதாவியோ கூறும் விடயங்கள் முற்றிலும் பொய்யான விடயங்களே. ... மாத்தறையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுமில்லை..... இங்கு குறிப்பிட்டதைப் போன்று அந்த சமூகத்தினர் பன்சலைக்கு வரவுமில்லை... நாட்டில் தீ மூட்டும் இந்த இரத்த வெறியர்களின் கயிற்றை விழுங்க வேண்டாம் நண்பர்களே....!

குறித்த பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த அமைதியின்மை தொடர்பில்  theleader.lk  நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்ட போது இவ்வாறு கூறினார்.

“இவ்வாறான அமைதியின்மை நிலையினை ஏற்படுத்தியது மாத்தறை பிரதேசத்தின் தாமரை மொட்டு கட்சியின் தலைவர் ஒருவராகும். இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் அடியாளாகும். சம்பவம் இடம்பெற்ற உடனேயே நான் ஜனாதிபதிக்கு அறிவித்தேன். பாதுகாப்பு தரப்பினர் உடன் தலையிட்டு தற்போது பிரதேசத்தில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராஜபக்ஷக்களின் சமூக ஊடகங்கள் மிகவும் மோசமான வகையில் இச்சம்பவத்தின் ஊடாக நாட்டையே தீ மூட்ட முயற்சித்தன. இச்சம்பவத்தின் பின்னால் இருப்பது தாமரை மொட்டுவைச் சேர்ந்தவர்களே என நான் தெளிவாகவே கூறுவேன். கொட்டோ இத்தடவை இனவாதத்தைத் தூண்டிவிட்டு வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவானதாகும். இதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி