ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்தது ஜனநாயக கோட்பாடுகளைப் பலப்படுத்தும் செயல் என்றும், இலங்கையில் ஜனநாயக
அரசியல் நீரோட்டத்தில் செயற்படும், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் ஊடாக அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கல்வித் துறையின் பிரதானி கலாநிதி மஹீம் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பல்லின, பல மொழி, பல சமய சமூகங்களின் இருப்பை வலுப்படுத்தல் தற்போது சமூகத்தின் கடமையாகும். இது  இலங்கையின் எதிர்கால தலைமைத்துவத்தின் பொறுப்புக்களுக்கு அப்பால் சென்ற பொறுப்புக்களாகும். இவ்வாறான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நிறைவேற்ற முடிவது பழங்குடிச் சிந்தனைகளோடு செயற்படும் குழுக்களால் அல்ல.  சாப்பாட்டு மேசையில் வேட்பாளரைத் தெரிவு செய்யும் அரசியலினுள்ளும் அல்ல.

நாட்டின் உண்மையான சவால்களை இனங்கண்டு கொண்டு, அந்தச் சவால்களுக்கான பதிலை வழங்கக் கூடிய அரசியல் நோக்கினைக் கொண்ட ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்ளும் கட்சிகள் மற்றும் தலைவர்களால் மட்டுமே முடியும்.

ஐக்கிய தேசிய முன்னணி நாட்டு மக்களை வெற்றிபெறச் செய்வதற்கு ஒன்று சேர்ந்த கூட்டணியாகும். சஜித் பிரேமதாச மாளிகையில் இருந்து  கஷ்டமான இடத்திற்கு வந்த ஒருவராகும். கஷ்டமாக இடங்களிலிருந்து மாளிகைக்குச் சென்றவர்களின் எதிர்பார்ப்பு, மக்கள் அபிலாஷைகளை வெற்றி பெறச் செய்வதன்றி, ஒரு குடும்பம் மற்றும் நம்பகமான பரம்பறையின் வெற்றியைத் தீர்மானிப்பது மாத்திரமாகும்.

நாட்டில் ஏற்பட்ட சுதந்திரம், சமாதான சூழல் மக்களின் பாதுகாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் உள்ளிட்ட சாதகமான வெற்றிகளை எதிர்பார்ப்பதற்கும், சர்வாதிகார, அடிமை ஆட்சியின் பிரவேசத்தைத் தடுப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தில் தீர்க்கமான செயற்பாடுகளுக்காக அனைத்து முற்போக்கான சக்திகளினதும் ஒத்துழைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்க வேண்டும்”

கலாநிதி மஹீம் மெண்டிஸ்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி