தான் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை என ஐக்கிய தேசிய

கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியிருப்பது நிபந்தனைகளுடனேயே என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் theleader.lk இணையம் அமைச்சா் சஜித்திடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதாவது,

“அவ்வாறான நிபந்தனைகள் தொடர்பில் இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. எனினும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவாகக் கூற வேண்டும். நான்  எதற்காகவும் நாட்டின் சுயகௌரவத்தையும், கட்சியினதோ அல்லது முன்னணியினதோ சுய கௌரவம், அதே போன்று எனது சுய கௌரவத்தை அடகு வைத்துவிட்டு அதன் மூலம் இலாபம் பெறுபவனல்ல. கடந்த காலங்களில் அவ்வாறானவர்கள் இருந்திருக்கலாம். எனினும் இந்த சஜித் பிரேமதாச அவ்வாறான ஒருவனல்ல.

எந்த நிபந்தனைகளுக்கு அடிபணிந்து இழிவான வேலை செய்யப் போவதில்லை.  எனவே நிபந்தனைக்கு அடிபணிந்து வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு சஜித் பிரேமதாச ஆயத்தமாக இல்லை” எனக் கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி