முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு
உண்மைக்குப் புரம்பானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மிகவும் சிறந்தது அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடுவதே என்றும்,  அல்லது தனிப்பட்ட ரீதியில் கேட்டறிந்து கொள்வது என்றும், அவ்வாறில்லாமல் பகிரங்கமாகவே அது தொடர்பில் கருத்து தெரிவிப்பது ஜனநாயக  ஆட்சி முறையினுள் தகுந்ததல்ல என்பது தனது எண்ணமாகும் என்றும், அது பொறுப்புடனான செயற்பாடு அல்ல என்றும் பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் முழுமையான அறிக்கை பின்வருமாறு!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளா் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி என்மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரையினைச் செய்யும் அதிகாரம் இருப்பது பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபருக்கு மாத்திரமேயாகும். நான் ஒரு போதும் அரசியலமைப்புக்கு மாற்றமாக நடந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பு மாற்றமாகச் செயற்படுவோர்  தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் இருக்கின்றன. அதற்குள் நான் விழுந்து விடவில்லை.

திருமதி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவையோ அல்லது வேறு எந்த ஒருவரையோ உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு நான் கோரிக்கை விடுக்கவில்லை. எனவே அவ்வாறான கடிதம் ஒன்றை வெளியிட்டதாகக் கூறி சுமத்தப்படும் குற்றச்சாட்டு போலியானதாகும். நான் அதனை நிராகரிக்கின்றேன்.

திருமதி தில்ருக்ஷி விக்ரமசிங்கவின் கூற்று தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். தற்போது சட்டமா அதிபர் இது தெடர்பில் விசாரணை ஒன்றைச் செய்யுமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். அந்த விசாரணைகளைத் துரிதப்படுத்துவதே சிறந்தது. இதன் போது அழுத்தங்களைச் செய்த அரசியல்வாதி யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்கு முடியும். அதே போன்று முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குவின் பணிப்பாளர் சாயகம் சட்டவிரோதச் செயற்பாடுகளைச் செய்திருந்தால் அவைகளையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியுமாக இருக்கும்.

தில்ருக்ஷி ஒரு போதும் அலறி மாளிகையில் பணியாற்றவில்லை. மோசடி எதிர்ப்பு குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது அலறி மாளிகையில் அல்ல. வெளியிலேயே அது அமைக்கப்பட்டிருந்தது. ஆனந்த விஜேபாலவே அதன் பணிப்பாளராகச் செயற்பட்டார். இந்தக் குழுவின் கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகை தந்தது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்  துஷித முதலிகே என்பவராகும்.

எனவே ஜனாதிபதி கூறிய விடயம் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி