ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.



பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விளக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெசில் ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், அதே நாளில் அவர் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி வரை அவர் நிதி அமைச்சராக இருந்தார்.

இதேவேளை, பெசில் ராஜபக்ஷவின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்திற்கு இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி