1200 x 80 DMirror

 
 

அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்துரைத்த பிரதமர், நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.

பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும்.

எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

வரப்போகும் கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

இந்த கடினமான மூன்று வாரங்களை பொறுமையாக எதிர்கொள்வோம்.

நம் நாட்டின் வருடம் ஒன்றிற்கான அரிசியின் தேவை 2.5 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். ஆனால் எங்களிடம் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

இந்த நிலை நெல் மற்றும் பல பயிர்களுக்கும் பொதுவானது.

அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

நமது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டொலர் அளவில் செலவாகும்.

ஆகையால், அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளைஉடனடியாக தொடங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

நாடும் எதிர்கொண்டுள்ள நிலைமையை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தநிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும்.

இங்கு எங்களது முதன்மையான கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது.

ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் நாம் இந்நிலையிலிருந்து மீள முடியாது.

நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இது இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கும் காரியம் அல்ல.

இந்த சவாலை அற்புதங்களால் செய்திட முடியாது.

புத்திசாலித்தனமாக சிந்திக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அவசியம்.

ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது.

தற்போதைய நெருக்கடியால் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக மசகு எண்ணெய் விலை 40மூ வரை உயரும் என சிலர் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த பின்னணியில் எரிபொருளுக்கான கூப்பன் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரிக்க முடியாது.

எப்படியாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு 3300 மில்லியன் டொலர் எரிபொருளைத் தேடிக் கொள்ள வேண்டும்.

எரிவாயு இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

நாங்கள் தற்போது எரிவாயு இறக்குமதி செய்ய பலதரப்பு உதவி, உள்ளூர் நாணயம் மற்றும் இந்திய கடன்களைப் பயன்படுத்துகிறோம்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிவாயுவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

கடந்த காலப்பகுதியில் எங்கள் அறுவடை குறைந்துள்ளது.

இவ்வாறான நிலைமையை சிறுபோகத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளதுடன் அடுத்த பெரும் போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு இப்போதிருந்தே நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

நமது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டொலர் அளவில் செலவாகும்.

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் விவசாயத்தை உயர்த்த இரசாயன உரங்கள் தேவை.

நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்களை இறக்குமதி செய்வதற்கு வருடத்திற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

ஒரு பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

அல்லது பணம் மற்றும் முயற்சி விரயமாகிவிடும்.

தற்போது நாட்டுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பல்வேறு சர்வதேச உதவி திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், பல்வேறு நாடுகளின் உதவிகளைப் பெறவும் திட்டமிடப்பட்டது.

மருத்துவம் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு அந்த குழுக்களும் நாடுகளும் கணிசமான ஆதரவை வழங்குவதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுகாதாரத்திற்காக பெரிய அளவிலான அந்நியச் செலாவணி எங்களுக்குத் தேவையில்லை.

அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சூழலில், அடுத்த ஆறு மாதங்களில் நம் வாழ்க்கையை சாதாரணமாக வைத்திருக்க 5 பில்லியன் டொலர்கள் தேவை.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இணையாக ரூபாயை பலப்படுத்த வேண்டும்.

ரூபாயை வலுப்படுத்த இன்னும் 5 பில்லியன் டொலர் தேவை.

அதாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டை முன்னெடுத்து செல்ல 6 பில்லியன் டொலர்களை நாம் திரட்ட வேண்டும்.

இத்தனைக்கும் மத்தியில் சராசரி தேசிய உற்பத்தியை உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய வங்கியின் அறிக்கையின் படி, 2022ம் ஆண்டு சராசரி தேசிய உற்பத்தி வளர்ச்சி 3.5 ஆக உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின்படி, நிலைமை இன்னும் மோசமானது.

அவர்களின் கருத்துப்படி, அதனுடய வளர்ச்சி - 6.5 வீதமாகும்.

2019ஆம் ஆண்டு நாம் நடைமுறைப்படுத்திய வரி முறை ஒழிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் 6.6 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளது.

அதுதான் நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்.

எனவே, நாம் உடனடியாக 2019 வரி முறைக்கு திரும்ப வேண்டும்.

நாம் வீழ்ந்த இடத்திலிருந்து எம் உயிர்த்தெழுதலைத் தொடங்க வேண்டும்.

சமீப காலமாக காலவரையின்றி பணம் அச்சடிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

2020 முதல் 2022 மே 20ம் திகதி வரை 2.5 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.

பல அரசு நிறுவனங்களில் முறையான நிதி மேலாண்மை இல்லை. எனவே, புதிய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு உதாரணம்.

அவர்களிடம் நிதி இருந்தாலும், திறைசேரி விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த நிதியை நிர்வகிக்க தவறிவிட்டனர்.

எமது நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் எந்தவொரு அரச நிறுவனங்களின் நட்டத்தையும் ஈடுகட்ட அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாதுள்ளது.

அந்தக் கடன் சுமையை இனி அரசோ அல்லது அரச வங்கிகளோ சுமக்க முடியாது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

எங்களுடைய எதிர்காலப் பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் விவாதித்தோம். அதன்படி, 2023ம் ஆண்டு அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டும். பின்னர் 2024 ஆம் ஆண்டுக்குள் நிதி ஊக்குவிப்பு மூலம் பொருளாதார ஊக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுவோம்.

2025 ஆம் ஆண்டிற்குள், நமது வரவு செலவுத் திட்டங்களை சமநிலைப்படுத்துவது அல்லது முதன்மை உபரியை உருவாக்குவதே எங்கள் இலக்கு.

இந்த நீண்ட கால இலக்கை நோக்கி இந்த பொருளாதார வேலைத்திட்டம் தொடர்ந்து செல்ல வேண்டும்.

அதிகாரத்தில் உள்ள தனிநபர்கள், குழுக்கள் மற்றும் கட்சிகள் மாறினாலும், நாம் நமது சொந்த இலக்குகளை அடைவதும், மிக உயர்ந்த செயல்திறனைப் பேணுவதும் கட்டாயமாகும்.

இந்த வேலையில் நமது வெளிநாட்டு உறவுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். சர்வதேச ஆதரவை அதிகரிக்க வேண்டும். சில தவறான செயல்களால் உலகில் ஓரங்கட்டப்பட்ட நாடாக மாறி வருகிறோம்.

அந்த நிலையை மாற்றுவது எளிதல்ல. ஆனால் நாம் அதை எப்படியாவது செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்த கடினமான நேரத்தில் நமது நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் இந்த நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பல பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

எதிர்வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் பகிரங்க வேண்டுகோள் விடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவி கோருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், உணவு, விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நான்கு மாத காலத்திற்கு 48 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டங்களை நமது நாட்டிற்கு வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த திட்டங்கள் அனைத்தும் எந்த காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

அடிப்படையற்ற காரணங்களுக்காக நட்பு நாடுகளால் எமக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க திட்டங்களை இடைநிறுத்துவது குறித்து விசாரணை நடத்துமாறு பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவை நான் வலியுறுத்துகிறேன்.

நட்பு நாடுகளை அந்நியப்படுத்திய பிறகு, தரையிலும் எங்களுக்கு உதவ இந்தியா முன்வந்தது.

இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு எங்கள் மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜப்பானுடன் பழைய நட்புறவை மீண்டும் ஏற்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

எங்களின் கடன் வழங்கும் கூட்டாளிகளை ஒன்றிணைக்க உதவி மாநாட்டை நடத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுத்தோம்.

இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது எம் நாட்டுக்கு பெரும் பலம்.

சீனாவும் ஜப்பானும் வெவ்வேறு கடன் அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. இவ்வாறான ஒரு மாநாட்டின் மூலம் கடன் வழங்கும் அணுகுமுறைகளில் சில உடன்பாடுகளை எட்ட முடியும் என்பது எங்கள் நம்பிக்கை.

இதுவரை வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பலதரப்பு இறக்குமதியாளர்களிடமிருந்து பெறப்பட்ட பல கடன் தவணைகளை இந்த மாதம் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடன் தவணைகளை நாங்கள் செலுத்தவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் புதிய கடன்களை எடுக்க வேண்டியிருக்கும், அந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இறுதி இலக்கு.

இடைக்கால வரவு செலவு திட்டம் அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும். மற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம்.

ஏற்றுமதி பொருளாதாரம், சுற்றுலா கட்டுமானம் போன்ற பல துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசர தேவை உள்ளது.

பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கும் வேளையில், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இயன்றவரை அவர்களின் துன்பத்தைப் போக்க நடவடிக்கை எடுப்போம்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கான தற்போதைய ஆண்டு செலவு 350 மில்லியன் ரூபாவாகும்.

இந்தத் தொகை 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் கடன்களை நூறு சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

சிறு நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும் அவலநிலையில் இருப்பதை நாம் அறிவோம்.

இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளிடம் பெற்ற விவசாயிகளின் கடன்கள் உடனடியாக நிறுத்தப்படும்.

மக்களுக்கு, அவர்களது காணிகளை சுதந்திரமாக உரிமையாக்குதல் வேண்டும என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி