களுவாஞ்சிகுடி பொலிஸாரால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் காணொளி பதிவென்றை வெளியிட்டுள்ளதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் டுவிட்டரில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

“களுவாஞ்சிகுடி பொலிஸாரால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார்! வடக்கு கிழக்கில் சட்டம் அமுல்படுத்தப்படுவது நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்டது என்பதை இப்போது மீண்டும் காட்டுகிறது !!" என்று சுமந்திரன் டுவீட் செய்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அரச எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமக்கு ஏன் இவ்வாறான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும்  வடக்கு கிழக்கில் சட்டம் அமுல்படுத்தப்படுவது நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்டது  எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  டுவிட்டரில் காணொளி பதிவென்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி