கொழும்பு - காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை 18 ஆவது நாளாகவும் தொடர்கிறது.


எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக போவதில்லை என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்பாக ' மஹிந்த கோ கம ' எனும் பெயரில் மற்றும் ஒரு போராட்டத்தில் மக்கள் முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து செல்ல உத்தரவிடுமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 25) நிராகரித்தது.

இந்நிலையில், கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னால் ' மஹிந்த கோ கம ' எனும் பெயரில் இரவிரவாக போராட்டம் இடம்பெற்று வந்தது.

May be an image of 7 people, people standing and outdoors

எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அலரிமாளிகைக்கு முன்னால் நடைபாதையில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் விசனம் வெளியிட்டதோடு கொள்ளுப்பிட்டி பொலிஸிலும் முறைப்பாடு செய்ய முற்பட்டனர்.

முறைப்பாடு பெற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ள நிலையில் அங்கு பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் முறுவல் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொலிஸாரிக் தடைகளையும் அரசின் அழுத்தங்களையும் மீறி நேற்றையதினம், பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் சவப்பெட்டிகளை ஏந்தி வந்த அகில இலங்கை விவசாய போதனாசிரியர்கள் சங்கத்தினர் இணைந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் பின்ன குறித்த சவப்பெட்டியை போராட்டக்களத்தில் எரித்து தமது எதிர்ப்பை மேலும் வெளிப்படுத்தினர்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி