leader eng

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமாயின் அது என் தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்க பெரும்பாலான எம்.பிக்கள் தயாரில்லை.

அரசியல் தெளிவற்றவர்களே என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுகிறார்கள் என மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதைப்போன்று வரலாற்றில்  பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். பிரச்சினைகளை பொறுமையுடன் கையாள வேண்டும்.

இது தொடர்பில் தெளிவில்லாதவர்கள் தான் என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுவதாக அறிய முடிகிறது. பதவி விலகுமாறு பெரும்பாலான தரப்பினர் குறிப்பிடவில்லை அத்துடன் என்னிடம் எவரும் அறிவுறுத்தவுவில்லை என பிரதமர் கூறினார்.

கொள்கையற்ற வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. இடைக்கால அரசாங்கத்திற்கு சகல தரப்பினரது ஆதரவும் அவசியம். ஒருவேளை இடைக்கால அரசாங்கம் என்றதொன்று ஸ்தாபிக்கப்பட்டால் அது என் தலைமைத்துவத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும்.

 பிறிதொரு தரப்பினரை பிரதமராக்கி அரசாங்கத்தை கொண்டு செல்ல அதிகமான எம்.பிக்கள் தயாரில்லை என்றார்.நாடு இக்கட்டான நிலையில் இருப்பதையும், நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பலம் தற்போதைய அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு அதிக நெருக்கடிகளை சந்தித்த சந்தர்ப்பங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறு போச்சுவார்த்தைக்கு வராவிட்டால் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நேரிடும் எனவும் கூறினார்.

பேச்சுவார்த்தை ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி