தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பாவி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலகுமாறு முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நேற்று (21) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடிதத்தை கையளித்துள்ளார். 

பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவிவிலகி அனைத்துக் கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசு சிறிய அமைச்சரவையுடன் அமையவேண்டும் என குறித்த கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். தந்திரங்கள் மூலம் அதிகாரத்தில் நீடிக்கலாம் என்ற அப்பட்டமான நம்பிக்கையுடன் எம்.பி.க்களை ஏலம் விடுவது நெருக்கடியின் ஆழத்தையும் அளவையும் மேலும் விரிவுபடுத்தும் என்று கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி