அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழுவின் 41 உறுப்பினர்கள் அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச அணி, உதய கம்மன்பில அணி உள்ளிட்ட 11 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த யோசனை வரைபை சபாநாயகரிடம் கையளித்தனர். 

தமக்குக் கிடைத்துள்ள அனைத்து அரசியலமைப்பு முன்மொழிவுகளையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ (PPP) 21 ஆவது திருத்தத்தின் நோக்கம் 20 ஆவது திருத்தத்தினை நீக்கி 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக அம்சங்களை மீண்டும் அரசியலமைப்பில் இணைத்துக்கொள்வதாகும். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தனது 21ஆவது திருத்த யோசனை வரைபை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி