ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

மற்றும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் அலறி மாளிகையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது பிரதமர் விடுத்த சவாலை வெற்றிகொள்வதற்கு சஜித் பிரேமதாச நேற்றைய தினத்திலும் கூட பெரும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதன் பெறுபேறுகளை அடுத்த சில தினங்களில் நாடே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமான சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டுமாயின் ஐ.தே.கட்சிக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புக்கள் அவருக்கு கிடைக்க வேண்டும் என இந்த பேச்சுவார்த்தையின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக பீபீசி சிங்கள சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஐ.தே.கட்சிக்கு சிறுபான்மை மக்களது வாக்குகள் செல்வாக்கைச் செலுத்துமான என்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்திய பிரதமர், தற்போது நாட்டினுள் பிரதானமாக இரண்டு முகாம்களாக வாக்குகள் பிரிந்துள்ளதற்கு அமைய வேட்பாளர் யாராக இருந்தாலும் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்றி அவரால் வெற்றி பெற முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் அந்தக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பினருக்குமிடையில் இதன் போது இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இதில் கலந்து கொண்ட அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார “எம்முடன் தொடர்புடைய ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதி தீா்மானத்திற்கு வருவோம். இன்று இடம்பெற்றது வெற்றிகரமான பேச்சவார்த்தையாகும்” எனத் தெரிவித்தார்.

ரணில் போட்டியிடுவதாகக் கூறவில்லை.

தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தப் பேச்சுவார்த்தையின் போது எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் பீபீசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி