இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அதனை சமாளிக்க மக்கள் அன்றாடம் பல சவால்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.


நாட்டின் எரிபொருள் விலை அதிகரிப்புடன் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

இதனிடையே பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதற்காக பல மணி நேரங்கள் ஏன் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களை மேலும் மேலும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையை, சாதகமாக்கி கொண்டு தமது பணப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் இந்த நாட்டுக்கு மற்றொரு சாபக்கேடு.

நாட்டில் நேற்றைய தினம் ( 20) மாத்திரம் காலை முதல் மாலை வரையிலான காலப்பகுதியில் 12 மாவட்டங்களில் 18 பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாகியுள்ள போதிலும், மக்களின் துயரில் குளிர்காயும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் மற்றொரு காரணம்.

ரபுக்கனை சம்பவத்தில் பிண்ணனியில் அவ்வாறானதொரு காரணமும் உள்ளது. பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து மக்களை இரவு முழுவதும் காக்க வைத்து காலையில் புதியவிலைக்கு பெற்றோலை விற்பனை செய்து அதிக இலபம் ஈட்ட எண்ணிய அந்த பெற்றோல் நிலைய உரிமையாளரின் பேராசை இன்று ஒரு உயிரை பலிதீர்த்துள்ளது.

பலரை வைத்தியசாலையில் அனுமத்திக்கவும் காரணமானது.

நாட்டில் உள்ள பாரிய விற்பனை நிலையங்கள் முதல் சிறு வியாபாரிகள் வரை, தாம் பொருட்களை பழைய விலைகளுக்கு கொள்வனவு செய்தாலும் புதிய விலை ஏற்றம் தொடர்பான தகவல்கள் வெளியானதும் பொருட்களை பதுக்கி அவற்றை புதிய விலைக்கு விற்று கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன.

நாட்டின் அத்தியவசிய பொருட்களின் விலை 3 மடங்காக அதிகரித்த போதிலும் மக்களின் அன்றாட வருமானம் அதே நிலையில் தான் உள்ளது. இங்கு எவருக்கும் சம்பள அதிகரிப்போ கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை.

அவ்வாறு இருக்க மக்களின் குருதியை குடிக்கம் இவ்வாறான வியாபாரிகள் மனித இனத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இவர்களை தட்டிக்கேட்பதற்கும் தற்போதைய அரசில் எவரும் இல்லை.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் ஏடுகளில் இருந்த போதும் அவற்றின் பின்னால் செல்ல மக்களுக்கு பணமோ நேரமோ இல்லை. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

மக்களோடு மக்களாக வாழ்ந்து இவ்வாறு மாபெரும் ஊழல்கள் செய்து பணம் ஈட்டும் இப்படியாக வியாபாரிகள் தண்டிக்கப்படுவதில்லை.

இவர்கள் காய்து போன உடம்பில் கூட குருதியை உறிஞ்சும் அட்டைகள், இவர்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்புகளை வெளியட வேண்டியதும் தற்போதைய தேவையாக உள்ளது.

நாட்டில் மேலும் மேலும் போராட்டங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையே உள்ளது. ஒரு பாரிய அரசியல் மாற்றம் மட்டுமே இவை அனைத்தையும் மாற்றும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாகும்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி