பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபிக் ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

எவ்வாறாயினும் இவர்கள் எதிர்கட்சியில் சுயேட்சையாக செயற்பட போவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக எதிர்கட்சியில் இருந்த குறித்த மூவரும் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பைசல் காசிம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி இஷாக் ரகுமான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது, ​​குறித்த மூவரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பைசல் காசிம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதுவேளை, நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் நான்கு புதிய இராஜங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்,

சுரேன் ராகவன் - உயர் கல்வி இராஜாங்க அமைச்சு

வியாழேந்திரன் - இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை

சிவநேசத்துறை சந்திரகாந்தன் - கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

மொஹமட் முஷாரப் - புடவை  மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு

இதன்படி, தற்போது வரை 28 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்