1200 x 80 DMirror

 
 

பிரதமர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட உரையை உண்மையில் அரசியல் தெரிந்தவர்களுக்கு என்றால் அந்த ஒரு கதையை விளங்கிக்கொள்ள முடியாமலில்லை. இன்று எங்களுடைய நாட்டில் இருக்கக்கூடிய இந்த நெருக்கடிக்கு முன்னால் ராஜபக்சக்களின் அடுத்த கட்ட ஏற்பாடு என்ன என்று மிகத் தெளிவாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ராஜபக்சக்களுக்கு இருக்கக்கூடிய வழி சூழ்ச்சி மற்றும் அழிவு தவிர வேறெதுவும் இல்லை என்பது அந்த கதை மூலம் மிகத் தெளிவாக இருக்கின்றது. அதனால் மஹிந்தவுக்கு ம முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிலை வழங்குவது ரட்டே ராலவின் பொறுப்பாகும். 

அடுத்ததாக மஹிந்தவின்  அழுத்தத்துக்கு பயந்து கொள்ள வேண்டாம் என்று இந்த நாட்டு மக்களுக்கு  குறிப்பிடுவதும் ரட்டே ராலவின் ஒரு பொறுப்பாகும்.விசேடமாக  ஏப்ரல் 3ஆம் திகதி முதல் போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு. அதேபோன்று அதற்கு இருக்கக்கூடிய பதில் என்னவென்றும் சொல்ல வேண்டும்.

 சில சந்தர்ப்பங்களில் அந்த பதிலை குறிப்பிட்ட பின்னர் ரட்டே ராலவுக்கு வெலிகமவுக்கு போவதற்கு வேண்டி ஏற்படும். பரவாயில்லை அது தொடர்பில் இரண்டாவதாக நாங்கள் யோசிப்போம். உண்மையான கதை தற்பொழுது ராஜபக்சக்கள் தோல்வியுற்று விழுந்த கொக்கைப் போல் இருக்கின்றார்கள். 

ஜனாதிபதி, சமல், நாமல்,பெசில் உள்ளிட்ட ராஜபக்சக்கள் இன்னும் இருப்பது ஒளிந்து கொண்டுதான். உண்மையில் மஹிந்தவும் ஒளிந்து கொண்டுதான் இருந்தார். கடந்த வாரம் மஹிந்த பதவி விலகுவதற்கு இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் பதவி விலகல் கடிதம் கூட தட்டச்சு செய்ய பொறிக்கப்பட்டிருந்தது. அவையாவும் நீங்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டிருப்பீர்கள். 

அவ்வாறு ஒழிந்து கொண்டிருந்த மஹிந்தவுக்கு இவ்வாறான ஒரு தெம்பு வந்தது எவ்வாறு. மீளவுமல முன்னோக்கி வந்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு தைரியத்தை வழங்கியது யார் ?அந்த தைரியத்தை வழங்கியது இந்த நாட்டினுடைய  எதிர்க்கட்சி. 

அதேபோன்று சுயாதீனமாக செயற்படுவோம் என்று மக்கள் போராட்டத்தை தாரைவார்த்த சிறிய கட்சி கூட்டணி. அடுத்ததாக சுயாதீனமாக செயற்படும் என்று குறிப்பிட்ட மொட்டு அணியினர் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். உண்மையில் அவர்கள் தற்பொழுது மக்கள் போராட்டத்தை தாரைவார்த்து விட்டு விட்டார்கள்.

அவற்றை   தாரை வார்ப்பு மேற்கொள்வதற்கு கடந்த சில தினங்களில் திரைக்குப்பின்னால் அதிகமான விடயங்கள் நடைபெற்றது. அந்த அனைத்து சம்பவங்களும் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் ரட்டே ரால ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொன்றாக அபாய எச்சரிக்கை விட்டுக்கொண்டிருந்தார்.

 ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த நாளிலேயே ரட்டே ரால குறிப்பிட்டிருந்தார் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மக்கள் போராட்டம் மற்றும் பாராளுமன்ற போராட்டம் ஆகிய இ்ண்டும் ஒன்றாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று. 

அந்த பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது. அதே போன்று மீண்டும் ஒரு தடவை இந்த பாராளுமன்றத்தில்  இருக்கக்கூடிய கடல் கன்னிகள் பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் இதனுள்ளே இருப்பதாக. 

அமைச்சரவை அமைச்சு,  இராஜாங்க அமைச்சுக்களுக்கு  விற்பனை செய்யக்கூடிய நிலவரம் நாளை தோன்றும் என்பதனை  உங்களுக்கு அவதானிக்க முடியும். தேவை என்றால் நீங்கள் ஏப்ரல் மாத ரட்டே ரால ஆக்கங்கள் சிலவற்றை எடுத்து பாருங்கள். 

அவை அனைத்திலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்று. தற்போது உறுப்பினர் ஒருவர் ராஜபக்சக்கள் கட்சிக்கு சார்பாக அல்ல சுதந்திரமாக இருப்பதற்கு வழங்குகின்ற பணம்  5 கோடியை தாண்டியுள்ளது. அதனால் தற்போது ராஜபக்ஷக்களுக்கு தெரியும் 41ஆவது அணியையும  வழி நடத்த முடியும் என்று.

 ரட்டே ரால வரலாறு முழுவதும் இவ்வாறான போராட்டத்தை விமல் போன்றவர்கள் எவ்வாறு தாரை வார்த்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் சிறிய கட்சி கூட்டணி மேற்கொண்ட கலந்துரையாடல் பொய்யென்று தற்பொழுது தெளிவாக விளங்கி உள்ளது. அதை ராஜபக்சக்கள் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். 

இவர்கள் மேற்கொள்ள வேண்டியது  ஜனாதிபதியும் பின்னால் சென்று விடுவது அல்ல. பாராளுமன்ற பெரும்பான்மையை  ராஜபக்ஷவிற்கு எதிராக பெற்றுக்கொள்வதற்கு எதிர்க் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த வழிநடத்தலினை மேற்கொள்வதாகும். 

தற்போது அவர்கள் சென்றதன் பின்னர் மஹிந்த பிரதமராக பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய அடுத்த பதில் என்ன? அதுதான் ஒரே ஒரு பதிலாக இருப்பது இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் என்று சொல்வதாகும். அதுதான் ராஜபக்சக்களை விழச் செய்யவுள்ள ஒரே உறவு point ஆகும். 

அதனை செய்யாமல் இந்த மடத்தனமான படையணி வெளியில் வருகை தந்து நாமல நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப் பிரேரணைக்கு தாங்கள் இணக்கம் இல்லை என்று சொன்னார்கள்.அப்படியாயின் எந்த மடையனுக்கு தெரியாமல் இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மை இல்லையென. இதனை விட ஒரு தாரைவார்ப்பு இன்னும் இருக்கின்றதா? அந்த சந்தர்ப்பத்தை தான் மஹிந்த நேற்று மேற்கொண்டது. மஹிந்தவுக்கு தெரியும் மடையனாக வருகின்ற இடத்துக்கு  மடத்தனமாக இருக்க.

 செவிடனாக இருக்க கூடிய சந்தர்ப்பத்தில் செவிடனாக இருக்க. குருடனாக உள்ள இடத்தில் குருடனாக இருக்க வேண்டும் என்று.ரட்டே ரால குறிப்பிடுவதனை நேற்று மஹிந்த தன்னுடைய கதை மூலம் நிரூபித்தார். மஹிந்த  நேற்று நடந்து கொண்டது ஒரு செவிடனைப்போல். இல்லை என்றால் எவ்வாறு. 

இந்த நாட்டில் இருக்கக்கூடிய 95 வீதமானவர்கள் gota go home என்ற வசனம் கேட்காமல்  225 பேரும் வேண்டாது என்பது மாத்திரம் கேட்பது.  மஹிந்த அந்த இடத்தில் சிறப்பான முறையில் ராஜபக்சக்களை பாதுகாத்து அதனை பொதுப் பிரச்சினையாக மாற்றினார். 

அடுத்ததாக மஹிந்த அவருடைய கதையில் முழுவதும் ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார். அது இந்த பூமியில் இருக்கக்கூடிய  போராட்டத்தில் பங்குபெற்ற கூடிய இளைஞர் இவர்களுடைய போராட்டத்தை 88/89 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்தது. 

அந்த போராட்டத்தை எல்டீடிஈ யோடு தொடர்புபடுத்தினர். இறுதியில் குறிப்பிட்டது அவ்வாறான ஒரு இரத்த ஆறு  ஓடுகின்ற நிலைக்கு இந்த நாட்டை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டாம் என்று. உண்மையில் குறிப்பிட்டது பிள்ளைகளே சும்மா சாக வேண்டாம்  என்று.  

மஹிந்த போன்று  அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்தவர்களின் சமிக்ஞை ஜேஆர் போன்ற கொடிய இராட்சதர்களின்  அரசியல் சமிக்ஞை என்னவென்று ரட்டே ரால அன்றே இனங்கண்டார்.உண்மையில் மஹிந்த இதற்கு தயாரானது ஒரு வாரத்திற்கு முன்னரே. 

அவர்கள் அதனை ஏற்புடையது ஆக்கிக் கொண்டது நேற்று முன்தினம். இருந்தும் அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு எதிராக தற்பொழுது குண்டர் அணியினரை இறக்கியுள்ளார்கள். அனுராதபுரம், சிலாபம் போன்ற இடங்களில் நேற்று அதனை நாங்கள் கண்டோம். 

உண்மையில் தற்பொழுது அவர்களுக்குத் தேவையாக இருப்பது இந்த பூமியில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துவதே. அதற்கு அவர்கள் ஏப்ரல் 3 மக்கள் போராட்டத்தின் உள்ளேயே உளவாளிகளை அனுப்பி முடிந்துவிட்டது. அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

அதனால் காலிமுகத்திடல் போராட்ட பூமியில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய அந்த பூமியில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுதல் வேண்டும். தற்போது ஓரளவுக்கு தெரிந்த அடிப்படையில் அந்த இடத்திற்கு தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான ஒரு கருத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

 அதற்கு அவர்கள் பாலியல் தன்மையை கூட கையாளலாம். அந்த இடத்தில் இருக்கக் கூடிய இளைஞர் யுவதிகள் பாலியல் தேவைகளுக்காக ஒன்று கூடினார்கள் என்று உருவாக்கலாம்.  உண்மையில்  சில முக்கியமான நபர்கள் என்ற அடிப்படையில் இவ்வளவு காலமும் முகமூடி அணிந்துகொண்டு இருந்த  மனிதர்கள் இன்று சமூக ஊடகங்களில் மிருகங்கள் போன்று செயற்படுகின்றார்கள். 

சில அதிபர்கள் கூட அந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். உண்மையில் நாடு எவ்வளவோ அராஜகத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அராஜகத்திற்கு செல்லுகின்ற அவர்களுக்காக இவ்வாறு முன்நின்று செயற்படுகின்ற இலங்கையர் என்ற அடிப்படையில்  சாதாரணமாக வெட்கப்படவேண்டிய தன்மைக்கு உட்பட வேண்டிய நிலை இருக்கின்றது. 

எவ்வாறு இருப்பினும் ரட்டே ராலவை தைரிமற்றதாக்க  ராஜபக்சக்கள் அனைவரும் ஒன்றாக வந்தாலும் அது முடியாது.அதனால் ரட்டே ரால போராட்டக்காரர்களிடம் வேண்டிக்கொள்வது அதனை சரியான முறையில் பேணுங்கள். ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள், பெயர் போனவர்கள் அதனுடைய அமைப்பாளர்களாக நியமியுங்கள்.  தற்பொழுது அந்த இடத்திற்கு தேவையாக இருப்பது அன்பான படைத்தலைவர்கள்.

 உதாரணமாக யுவதியொருவரை  அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை உங்கள் மீது அவர்கள் ஏற்படுத்த முடியும். தேரர்களோடு  உங்களை முரண்பாட்டிக்கு இழுக்கக் கூடியதாக அமையும்.ரட்டே ரால இந்த இடத்தில் குறிப்பிடுவது எந்த  ஒரு சந்தர்ப்பத்திலும் வன்முறைகளுக்கு செல்ல வேண்டாம். 

ஒரு வசனத்தைக் கூட அவ்வாறு பயன்படுத்த வேண்டாம். இவர்களுக்கு தேவையாக இருப்பது அந்த இடத்துக்கு போராட்டத்தைக் கொண்டு சென்றால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிகமான நபர்களை அந்த இடத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

 விஷேடமாக இரவு நேரங்களில். அதேபோன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். உயர்ந்த பட்சம் சமூக வலையமைப்புக்களை பயன்படுத்துங்கள். அவற்றில் உண்மையான விடயங்களை நீங்கள் கதையுங்கள். ரட்டே ராலவினல முன்னய ஆக்கத்தை வாசித்திருப்பீர்கள்.அதில் தற்போது உங்களுடைய நிழல் கூட உங்களுக்கு எதிரியாக நீங்கள் நினைத்துக் கொண்டு வேலை செய்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டதனை. 

அவதானம் என்பது பயப்பட வேண்டாம் என்ற விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.மக்களுடைய ஒத்துழைப்பு இருக்கும் வரை இந்த போராட்டத்தை அவர்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதனை பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு ஆகும். அதே போன்று ரட்டே ரால இந்த நாட்டு மக்களிடம் வேண்டிக் கொள்வது மஹிந்தவின்  அந்த கதையை மீண்டும் கேளுங்கள். 

அதன் உள்ளே இருக்கின்ற அச்சுறுத்தலை விளங்கிக்கொள்ள. அச்சுறுத்தலானது யாருக்கும் அல்ல நல்ல ஒரு சமூகத்தைப் பற்றி போராடுகின்ற அந்த இளைஞர்களின் எழுச்சிக்கு எதிரானதே. ராஜபக்சக்கள் அதிகாரத்தை பாதுகாப்பதற்கு அந்த வேலையை செய்தால் அதற்கு தயாராக வேண்டும்  பதில் வழங்குவதற்கு. அதனை மேற்கொள்வது கூடியதாக இருப்பது சிவில் சமூகத்தின் உடைய போராட்டத்தினால் மாத்திரம் தான். 

முழு நாடுமே வீதிக்கு இறங்க வேண்டும். அதே போன்று இந்த நாட்டினுடைய விவசாய மக்கள் மக்கள்  ஒழிப்புக்கு எதிராக ஒட்டுமொத்த பாரிய வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனால் ராஜபக்சக்கள் போன்று அதற்கு எதிராக இருக்க கூடியவர்களுக்கு பதில் ஒன்று இருப்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

 அந்த போராட்டத்திற்கு மக்கள் வருவார்களாக இருந்தால் அந்த போராட்டத்தின் முன்னிலையில் வருவதற்கு ரட்டே ரால  தயாராக இருக்கின்றார்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை 

வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி