அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மேலும் வற்றிப் போகும் என் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இன்று தேவைப்படுவது ஆட்சி மாற்றமல்ல, புரட்சியைத் தவிர்ப்பதற்கான பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மாற்றமே எனவும் அவர் தெரிவித்தார்.சமூக ஊடகங்களில் நேர்காணல் ஒன்றில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும்,'' எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அங்கு மேலும் பேசிய அவர், “புத்தாண்டுக்குப் பிறகு சில நாட்களில் நமது வெளிநாட்டு கையிருப்பு வற்றிபோகும். 

மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரை மட்டுமே இந்திய கடன் வரிகள் மற்றும் பிற உதவிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியும். ஆகஸ்ட் வரை பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பணவீக்கம் என்பது காய்ச்சலைப் போன்றது, அது குறைவதற்கு முன் அதிகபட்சமாக அதிகரிக்கும்.

 இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டமே நமக்குத் தேவை. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். 

நான் முன்மொழிவது பாராளுமன்றம் நிதியை கையகப்படுத்தும் புதிய சட்டத்தை உருவாக்குவதாகும். இந்த நோக்கத்திற்காக   சட்ட சீர்திருத்தங்களின் தொகுப்பைத் தயாரித்து வருகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.“இன்று நிலவும் சூழ்நிலையை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். 

இளைஞர்களால் வழிநடத்தப்படும் மக்கள், புதிய தொடக்கத்தையும் அமைப்புகளின் முழுமையான மாற்றத்தையும் விரும்புகிறார்கள். தற்போது நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்கள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் இது மக்கள் புரட்சியாக மாறும்,'' என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி