ஹம்பாந்தோட்டை மெதமுலன பிரதேசத்தில் டி.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க 33.9 மில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக

பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தவறு இருப்பதல், அதனை நிராகரிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை 5 பேர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது

.கோத்தபாயவின் மனுவை உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட, எல்.ரி.பீ. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய அமர்வு ஆராய்ந்தது.</p><p>இதனையடுத்து மனு தொடர்பான உத்தரவை வாசித்த நீதியரசர் சிசிர டி ஆப்ரூ, ஐந்து பேர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்களின் இணக்கத்துடன் மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கும் அளவுக்கு அதில் நியாயமான சட்ட அடிப்படைகள் இல்லை எனவும் நீதியரசர் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி