இன்று மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு நாடளாவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை நிறுத்துவதற்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.


முன்னதாக நாடளாவிய ரீதியில் நேற்று (02) மாலை 06 மணிமுதல் திங்கட்கிழமை காலை 06 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து இலங்கையில் இன்று அதிகாலை முதல் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த கோரிக்கைக்கு அமைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையிலேயே பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக பலவாறு போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.


எனினும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிதர்சனத்திலும், இணைத்திலும் மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.


இது நாட்டை ஆதாள பாதாலத்தில் தள்ளியுள்ள ராஜபக்ஷஅரசாங்கத்தின் சர்வதிகார போக்கையே காட்டுகின்றது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி