ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் மிரிஹானவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவை இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.


பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர், பிரதான ஊடகங்களுக்கு அறிக்கை செய்யும் எட்டு பேர் உட்பட பலரைத் இவ்வாறு தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


தற்போதைய ஆட்சியில் ஒரே நாளில் தென்னிலங்கையில் பெருமளவிலான சிங்கள ஊடகவியலாளர்கள் ஒரே இடத்தில் தாக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.


சுமேத சஞ்சீவ கல்லகே (தெரன), நிஸ்ஸங்க வெராபிடிய (தெரண), பிரதீப் தீப் விக்ரமசிங்க (தெரண), லஹிரு சாமர (தெரண), அவங்க குமார (சிரச), வருண வன்னியாராச்சி (லங்காதீப), நிசல் படுகே (டெய்லி மிரர்) (எஸ் சதுர தேஷான்) ஆகியோரே தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், இதில் பல பத்திரிகையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஜாமீன் வழங்க முன்வந்தனர்.


இவ்வாறு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது குறித்து டலஸ் கவலை வெளியிட்டுள்ளார்.


நுகோகொடவில் கடந்த வியாழன் இரவு இடம்பெற்ற போராட்டமொன்றை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவத்தை ஊடக அமைச்சர் டலஸ் அலஹம்பெரும வன்மையாக கண்டித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

dullas
“அமைதியாக போராட்டம் நடத்தும் மக்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடவோ, பொதுச் சொத்துக்களை அழிக்கவோ கூடாது.பத்திரிக்கையாளர்கள் மீதான கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்" என கூறியுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் வரை ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஏற்கனவே அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும உறுதிமொழியை வழங்கியிருந்தார்.


எனினும் தற்போது மிரிஹானவில் ஊடகவியலாளர்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அவர் பதவி விலகுவாரா என சமூக ஊடக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் செய்தி சேகரிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினரால் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் பேசுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்குமான உரிமை மாத்திரம் மீறப்படவில்லை என அதன் அழைப்பாளர் லசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வரும் சூழலில் இவ்வாறான சம்பவங்களால் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு ஏற்படும் பாதகமான தாக்கத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் லசந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

மிரிஹான சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ”நாடளாவிய ரீதியிலான ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி