leader eng


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் பெண்கள் நான்கு மடங்கு சுமையை அனுபவிப்பதாக சமூக பணி தொடர்பான கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் சந்திம ஜயசேன தெரிவித்தார்.


தற்போதைய சூழ்நிலையில் பெண்களைப் போல் யாரும் கஷ்டப்படுவதை காண முடியாது. இந்த நெருக்கடியின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என இலங்கை பெண்களின் தற்போதைய நிலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
74 வருடங்களாக இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடுத்த நெருக்கடிக்கு பெண்கள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இது தொழிலுக்கு செல்லும் பெண்களுக்கு மேலும் சவாளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு தொழிலுக்குச் செல்லும் பெண்ணை பணிபுரியும் பெண் என்று குறிப்பிடுகிறேன். வேலைக்குச் சென்ற போதிலும் பெண்கள் வீட்டிலும் வேலை செய்வது அவளுக்கு அவசியமான ஒன்று.
பெரும்பாலும் பணிபுரியும் பெண் ஓய்வெடுக்க மட்டும் வீட்டிற்கு வருவதில்லை மாறாக அவருக்கு இது மற்றொரு பணியிடமாக வீடு உள்ளது.
தற்போதைய அரசாங்கம் பெண்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு பெண்ணுக்கு இதுவரை இருந்த ஓய்வு இப்போது இல்லை.
எனவே, தற்போது தொழிலுக்குச் செல்லும் பெண்களுக்கு அரசியலும் பொருளாதாரமும் ஏற்படுத்தும் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. பன்மைத்துவம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் நாளுக்கு நாள் அதிகரிக்கம் நிலையில் பணிபுரியும் பெண்களின் துன்பங்களின் அளவைச் சுட்டிக் காட்ட என் பெண்ணிய உணர்வு கொடுத்த உள் அழுத்தத்தின் காரணமாக இந்தப் பதிவை எழுதுகின்றேன்.
நம் நாடு உழைக்கும் பெண்களைக் கொண்ட நாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெண்கள் இவ்வாறு தொழில் செய்வது குடும்பத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய நிவாரணம்.
தேசிய உற்பத்தியில் பெண்களும் அதிக பங்கைக் கொண்டு வருகிறார்கள். சலவை தொழிலில் இருந்து, தேயிலை பறிக்கும் தொழிலில் இருந்து, விவசாயத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றாலும் பரவாயில்லை. இங்கு தேவைப்படுவது பெண்களின் சம்பாத்தியம் மட்டுமே.
ஆனால் இப்படியாக பெண்கள் வாழும் நாட்டில் பெண்களுக்கு ராஜபக்ச அரசு ஏற்படுத்திய நெருக்கடி கொஞ்ச நஞ்சமல்ல.
எவ்வளவு பேசினாலும் இலங்கையில் உள்ள குடும்பங்களில் பெண்களுக்கு ஆதரவாக உதவுபவர்கள் குறைவு.
பெண்களின் அன்றாட வேலையில் மின் சாதனங்களால் ஓரளவு உதவியாக இருந்தது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு பயன்பாடு. குடும்பப் பணிகளைப் போலவே தன் வேலையையும் நிர்வகிப்பது அவளுக்கு எளிதாகிவிட்டது.
தற்போது எற்பட்டுள்ள மின்சார நெருக்கடியும் எரிவாயு நெருக்கடியும் அவளை அதாள பாதாளத்தில் தள்ளிவிட்டது.
இன்று சமையலுக்கு விறகு எடுக்க காடுகளுக்குச் செல்லவும், அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்கு அவளும் தொழில் இருந்து விடுமுறை எடுக்க வேண்டியும் உள்ளது.
எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, பல கிராமங்களுக்கான போக்குவரத்து சேவைகள் சரியாக இயங்கவில்லை. போக்குவரத்துக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இதுவரை கட்டிப் போட்டிருந்த பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
அத்துடன், மருந்துப் பற்றாக்குறையினாலும், விலைவாசி உயர்வினாலும் வீட்டில் உள்ள நோயாளிகள் மற்றும் குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது கொஞ்ச நஞ்சமல்ல. இதில் பாடசாலை செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் அடங்கும்.
பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால், அது குடும்ப அமைதியையும் குடும்ப வன்முறையையும் கடுமையாக பாதிக்கும்.
இதன் விளைவாக இன்று அரசுகள் பெண்களை பொருளாதாரப் படுகுழியில் தள்ளி, அவர்களின் வேலைப்பளுவை நான்கு மடங்காக உயர்த்தி, சமூக அந்தஸ்தைக் குறைத்துள்ளன.
வேலை என்று வரும் போது பெண்களை இவ்வளவு மோசமாக நடத்தும் அரசு சமீபகால வரலாற்றில் இருந்ததில்லை.
இந்த பொருளாதார நெருக்கடியில் அவள் இன்னும் பலியானவளாகவே இருக்கிறாள். அடிமைப்படுத்தப்படுவதோடு சுரண்டப்படுகிறார். பொருளாதார நெருக்கடியால் நிதி நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.
அரசாங்கம் சர்வதேச அளவில் கடன் வாங்கும் போது, ​​குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்குவது உண்டு. எரிவாயு சிலிண்டர் வெடிப்பு, உயிர் பலி. காயப்மடைந்தவர்களுக்க சிகிச்சை அவசியமாகின்றது.
ஏனெனில் இன்று பெண்கள் நுகர்வுப் பொருட்களின் பெரும் விலை உயர்வு, எண்ணெய் நெருக்கடி, உணவுப் பஞ்சம் போன்றவற்றால் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இன்றைய விலை நேற்று கேட்ட விலை அல்ல. எனினும் ஊதியம் அதிகரிக்காது. இந்த நெருக்கடியின் போது ராஜபக்ஷக்களின் கணக்குகள் அதிகரித்த போதிலும், எங்களின் கணக்குகளில் எதிர்மறையான இருப்பு உள்ளது.
தன்னிச்சையான அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகள் நாட்டை மோசமாக பாதிக்கும் போது, ​​வேலைக்கு வரும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு பன்முகத்தன்மை கொண்டது. இது இலங்கையின் சமூக கலாச்சாரத்தில் பெண்களின் பங்கில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நெருக்கடியில் ஆண்களும் பாதிக்கப்படுகிறான் என்பது உண்மைதான். இக்கட்டுரை பெண்களை அதிகம் மையப்படுத்தினாலும், ஆண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை கோடிட்டுக் காட்டவில்லை.
ராஜபக்ஷ அரசாங்கம், செழுமை என்ற கருப்பொருளைப் பயன்படுத்தி, பெண்களின் வாக்குரிமையை மோசடியான முறையில் புறக்கணித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பெண்களின் பொருளாதார பாதுகாப்பும், பொருளாதார சுதந்திரமும் இல்லாமல் போய்விட்டது. தோட்டங்களில் உள்ள பெண்கள், ஆடைத் தொழிற்சாலைகள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது அரசு மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் என்பது முக்கியமில்லை.
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து பெண்களினதும் சுதந்திரம் மற்றும் சமூக வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
பெண்களே, உங்கள் வலியை நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. உங்கள் குரல் எழ வேண்டிய தருணம் இது. கூட்டாக உணர்வை எழுப்புவதன் மூலம் மட்டுமே நெருக்கடியை சமாளிக்க முடியும்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி