leader eng


பயணங்களை முன்னெடுக்கும் போது, அது தொடர்பிலான புகைப்படங்கள், குறிப்புக்களை முகப் புத்தகம் வாயிலாக பகிர்வதை தவிர்க்குமாறும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களை எச்சரித்துள்ளார்.


அவ்வாறு பகிர்வதன் ஊடாக வீடுடைத்து திருடும் சம்பவங்கள் உள்ளிட்ட திருட்டுகள் பதிவாகலாம் எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களை எச்சரித்துள்ளார்.


பொலிஸ் தலைமைகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் குற்றவியல் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, இந்த எச்சரிக்கையை விடுத்தார்.


தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மூலம் பெரும்பாலும் பதிவாகும் திருட்டுக்கள், வழிப் பறிக் கொள்ளைகள், வாகன உதிரிப்பாக திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


குறிப்பாக பண்டிகை காலத்தில், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் மக்கள் தமது வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் தரித்து வைப்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் அசையும் சொத்துக்களை அணிந்த வண்ணமும் சுமந்த வண்ணமும் பயணிப்போர், தம்மை சுற்றி நடப்பவை தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் வழிப் பறி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தை, அவ்வாறு விழிப்பாக இருப்பதன் ஊடாக தவிர்த்துகொள்ள முடியும் எனவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி