leader eng

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கொழும்பில் இன்று ஆரம்பமாகும் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்)  மாநாட்டிற்காக இவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை  இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திப்பதற்கு முன்னதாக இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

 இதற்கமைய இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதன்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடு, 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், வடக்கு மீனவர் விவகாரம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேசப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவைளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அண்மையில் தயாரித்துள்ள ஆவணம் குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்படவில்லை. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி