ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் கூறுவதைப்போன்று அமைச்சரவையை குறைப்பதற்கு முன்னுதாரணமாக செயற்படுமானால் தாமும் அதற்கு முன்னுதாரணமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பொதுச் செலவீனங்களை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்காக தற்போதைய அமைச்சரவை அமைச்சுக்களின் வரம்பை பொருத்தமானதாக இணைத்து கணிசமாக குறைக்கப்பட அமைச்சரவையை அமைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) சர்வகட்சி மாநாட்டில் பரிந்துரைத்திருந்தது. 

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையை குறைக்க முன்வந்தார்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அமைச்சரவையில் உள்ளவர்களை நீக்கி இதை குறைக்கும் நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முன்னுதாரணமாக செயற்பட முடியும் என்னார்.

“அவ்வாறு அந்த கட்சி செயற்படுமானால் நாம் பதவி விலகத் தயார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முன்மாதிரியாக மொட்டில் இருந்து நான் ஒரு உதாரணம் இருப்பேன்.'' என்றார்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி