leader eng

ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உடனடியாக செய்யக்கூடிய நான்கு விடயங்கள் சம்பந்தமாக  இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

 


காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை இடம்பெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tna 5


இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, நாடாமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தாத்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ,த. கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
உடனடியாக செய்யக்கூடிய அந்த நான்கு விடயங்களில் முதலாவது நீண்ட காலமாக சிறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் விடுவிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுப்பாரென்று கூறினார்.

நீதி அமைச்சர் தன்னோடு அது குறித்து பேசி நீண்ட காலமாக இருக்கக்கூடியவர்கள் மிகவும் சீக்கிரமாக விடுவிக்கப்படுவதையும், பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைக்கின்ற அரசாங்கத்தினுடைய செயற்திட்டத்தின் கீழ் இவர்களின் விடுதலையையும் உடனடியாக செய்வதாக இனங்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது நாங்கள் சில இணக்கப்பாடுகளிற்கு வந்துள்ளோம், முக்கியமான விடயம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பானது இது குறித்து வெளிவிவகார  அமைச்சருடன் ஆராய்ந்தோம், அரசாங்கம் போரசிரியர் ரொமேஸ் டி சில்வாவின் அறிக்கைகளிற்காக காத்திருக்கின்றது அது வெளியாவதற்கு இன்னமும் இரண்டுமாதங்களாகும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

tna 4

இந்த சந்திப்பின் போது நாங்கள் சில இணக்கப்பாடுகளிற்கு வந்துள்ளோம், முக்கியமான விடயம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பானது இது குறித்து வெளிவிவகார  அமைச்சருடன் ஆராய்ந்தோம், அரசாங்கம் போரசிரியர் ரொமேஸ் டி சில்வாவின் அறிக்கைகளிற்காக காத்திருக்கின்றது அது வெளியாவதற்கு இன்னமும் இரண்டுமாதங்களாகும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக்காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களையும் அவருக்கு எதிரான குற்றங்கள் குறித்து  ஆராய்ந்த பின்னர் விடுதலை செய்வது என இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் விவகாரங்கள் குறித்து நானும் நீதியமைச்சரும் ஆராய்வோம் என தெரிவித்துள்ள சுமந்திரன் எங்கள் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்போம் அதன் பின்னர் இதனை எப்படி முன்னகர்த்துவது என ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.வடக்கில் ஜனநாயகத்திற்கு எதிரான காணி விவகாரங்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளதாக என கூறியுள்ளார்..

மாவட்டங்களை பிரதேசங்களை  கடல் எல்லைகளை மாற்றுவது இடம்பெறாது,தொல்லியல் வனவிலங்குகள் காடுகள் தொடர்பான சிறப்புச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட சட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் மீண்டும்  தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள அவர் நீண்டகாலமாக பயிர்செய்கையில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்தும் பயிர்செய்யலாம்,மீனவர்கள் தொடர்ந்தும் மீன்பிடியில் ஈடுபடலாம்,எங்கு வாழ்வாதாரம் இடம்பெறுகின்றதோ அது தொடரும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு  ஒரு இலட்சம் ரூபாயினை வழங்குவது என்ற  தீர்மானம்  குறித்து ஆராயப்பட்டது அது இழப்பீடு அல்ல தற்காலிக நிவாரணம் என ஆராயப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வலிந்து காணாமலாக்கப்பட்டோரை பொறுத்தவரை - அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் வழங்குவது என்ற முடிவு இழப்பீடு இல்லை - மாறாக குடும்பத்தினருக்கு தற்காலிக நிவாரணம் என ஜனாதிபதிதெரிவித்தார் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பமாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என சுமந்திரன குறிப்பிட்டுள்ளார்.வடமாகாண மக்களின் அபிவிருத்திக்கான விசேட நிதியம் குறித்தும் ஆராயப்பட்டது, புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக அணைத்தையும் செய்ய தயார் என அரசாங்கம் தெரிவித்தது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய சந்திப்பு வெற்றியா தோல்வியா என கேள்வி எழுப்பியவேளை வெற்றியா தோல்வியா என வகைப்படுத்த விரும்பவில்லை,ஆனால் ஜனாதிபதியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது கரிசனைகளை ஆராயமுடிந்தது சிறந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா ணூலாந்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்த அவர், வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் முதலீடு செய்யுமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி