1200 x 80 DMirror

 
 

ஜப்பானில் கிழக்கு கரையோர பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜப்பான் நேரப்படி இந்த நிலநடுக்கம் இரவு 11.34 மணியளவில் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
நிலநடுக்கம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்ததுள்ளதோடு இது டோக்கியோ வரை உணரப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, புகுஷிமா மற்றும் மியாகி ஆகிய கரையோர பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 மீட்டர் வரை எழும் அலைகள் கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் இங்கே......

https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us6000h519/map

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி