1200 x 80 DMirror

 
 

இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்புடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் நேற்றைய தினம் இந்தியாவிற்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு இன்று புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ள இலங்கைக்கு மேலும் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கலந்துகொண்டார்.

இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் உணவு மற்றும் ஏனைய அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், மேலதிக 1 பில்லியன் டொலர்கள் வழங்கப்படுமாயின், இலங்கைக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடன் வசதியை இந்தியா வழங்கியுள்ளதுடன், இதற்கு முன்னரும் நாணய மாற்று வசதி திட்டத்தின் கீழ் 400 மில்லியன் டொலரையும் கடன்களை மீள செலுத்துவதற்காக 500 மில்லியன் டொலரையும் இந்தியா வழங்கியிருந்தது.

இவ்வாறு கடன் வசதியை வழங்குவதற்கு தயாராகி வரும் இந்தியா, மற்றுமொரு புறத்தில் தீர்மானமிக்க பல உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான சம்பூர், பூநகரி பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்திலும் மூன்று இடங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் என்ற பெயரில் உடன்படிக்கை மூலம் இந்திய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை எண்ணெய் குதங்களின் பெரும் பகுதியும் இந்திய கூட்டு தொழில் முயற்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் பெறுமதிமிக்க முனையமொன்றை இந்தியாவின் அதானி நிறுவனம் கைப்பற்றியுள்ளதுடன், பலாலி விமான நிலையம், திருகோணமலை துறைமுகம் தொடர்பிலும் அவர்கள் கரிசனை செலுத்தியுள்ளனர்.

அன்றாட செலவுகளுக்காக இலங்கைக்கு கடன் வழங்குகின்ற இந்தியா, இலங்கையின் பெறுமதியான வளங்களின் உரிமைகளை கைப்பறிக்கொண்டுள்ளமை இதன்மூலம் தெளிவாகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி