1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (மார்ச் 16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 2 வருடங்களும் 4 மாதங்களும் ஆகியுள்ள நிலையில் 5 ஆவது முறையாக  மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இந்த விசேட உரையை அனைத்து  தொலைக்காட்சி சேவைகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்ற உள்ள  உரை சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக  SL Deshaya  இணைய தொலைக்காட்சி  சேவை தெரிவித்துள்ளது. 

இலங்கையில் பகலில் இருள் சூழ்ந்திருக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக 'சந்தேஷயா வித் சரோஜ்' சேனல் கூறியுள்ளது.ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு கூட கேலிக்குள்ளாகும் அளவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரபலமடைந்துள்ளார்.

தனுஷ்க ராமநாயக்க இந்த விடயம் தொடர்பில் முகநூல் காணொளி ஒன்றை பதிவிட்டு, ஜனாதிபதியை இந்த தருணத்தில் பதவி விலக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது குறித்து சமூக ஊடகங்களில் நிறைய பதிவுகள் பரிமாறப்படுகின்றன.

இதற்கிடையில் ஜனாதிபதியின் உரை கசிந்ததாக முகநூலில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் அறிய கீழ் உள்ள காணொளியை பாருங்கள்.


('சந்தேஷயா வித் சரோஜ்' சேனலில் இருந்து)

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி