leader eng

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு முதலில் நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்கள் நெருக்கடி இருப்பதை ஒப்புக்கொள்வதே நெருக்கடியை சமாளிப்பதற்கான முதல் படி என சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர் மகேஷ் ஹபுகொட தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தனது பேஸ்ப்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு நெருக்கடியை ஒப்புக்கொள்ளத் தவறினால், பிரச்சனை கட்டுப்பாட்டில் இழந்து இன்னும் மோசமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டின் தற்போதைய நிலைமையை சமாளிக்க மேலும் சில யோசனைகளையும் அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அவை,

  • இதுபோன்ற நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மனித சமூகங்கள் கடந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகளை ஆராயுங்கள். அப்படியானால் கடந்த காலங்களில் சமூகமயப்படுத்தப்பட்ட தவறுகளைப் புரிந்துகொண்டு மீண்டும் அந்தத் தவறுகள் நிகழும் வாய்ப்பைக் குறைக்கலாம். நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

  • மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது முக்கியம். அவர்கள் செய்த தவறுகளைப் பார்த்து அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்க முடியும். அவர்கள் எப்படி தைரியத்தைக் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியம். ஏனெனில் நெருக்கடியை சமாளிக்க நமக்கு தைரியம் மிக முக்கியம்.

  • தேவையான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் காலம் கடக்கும் முன்னர் சிந்திக்க வேண்டும். முந்தைய சிந்தனையைத் தாண்டி சிந்திக்க வேண்டியது அவசியம்.

  • உதவி கேட்க தயங்க வேண்டாம். நாடு இருக்கும் உண்மை நிலையை அறிந்த பிறர் எதிர்பாராத விதங்களில் நமக்கு உதவ முன்வரலாம். பொருள் ரீதியாக இல்லாவிட்டாலும்,சிறந்த ஆலோசனைகள் மூலமாக உதவுவார்கள்.

  • ஆலோசியுங்கள், பணத்தை முகாமைத்துவம் செய்யுங்கள். மற்றவர்கள் கூறுபவற்றையும் செவிமடுங்கள். ஒரு நெருக்கடியை தனியாக வெல்வது அரிதானது. மற்றவர்களுடன் இணைந்து சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அனைவருக்கும் உதவி தேவை. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுவது மிகப்பெரிய தலைமைப் பண்பு ஆகும்.

  • "உன் வீடு தீப்பிடிக்கும் போது, ​​வீட்டைக் கொளுத்தியவனைத் தேடுவதை விடுத்து, உன் வீட்டில் தீயை அணைத்துவிடு" என்ற புத்தரின் வார்த்தைகளை நினைவில் வையுங்கள். சேதத்தை குறைக்க எப்போதும் வேலை செய்யுங்கள்.

  • தேவையில்லாத விஷயங்களை உடனே கைவிடுங்கள். நெருக்கடியைச் சமாளிக்க உங்களுக்குத் தேவையானதைத் தொகுக்கவும். நீண்ட தூரம் பயணிப்பதற்கு இலக்குகள் இலகுவாக இருக்க வேண்டும்.

  • ஒவ்வொரு நெருக்கடியும் உங்களை சோதிக்கிறது. அந்த சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போது நீங்கள் கடந்த காலத்தின் பல விஷயங்களில் இருந்து விடுபட்டு புதிய விஷயங்களில் ஈர்க்கப்படுவீர்கள். எனவே தைரியமான மனதுடன் இருங்கள். எதுவும் நடக்கலாம்!

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி