இலங்கை மக்கள் இனி இல்லாதா பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் மக்கள் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வலுவடைந்துள்ளன.


தற்போதைய ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளும் மக்களும் எதிர்ப்புகளை வெளிப்படையாக தெரிவித்துவருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக சமூக ஊடகங்களில் #GoHomeGota பிரச்சாரத்தை மக்கள் ஆரம்பித்து சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்தனர்,

twit 01
இதற்கு எதிராக, அரசாங்கம் அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவாக #WeAreWithGota எனும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த ஹேஸ்டேக்கில் “இப்போது நாம் ஒன்றாக நின்று இந்த பொருளாதார நெருக்கடியை ஒன்றாக எதிர்த்து போராடுகிறோம். கோட்டாவுடன் நாங்கள் இருக்கிறோம்” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் செய்துள்ளார்.

“இந்த உலகம் கண்டிராத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். அதன் விளைவுகளை இப்போது #lka உணர்கிறது. நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றாகவே போரை முடித்தோம். நாங்கள் ஒன்றாக தடுப்பூசி போட்டு #COVID19SL போராடினோம்.

twit 04

இப்போது நாம் ஒன்றாக நின்று இந்த பொருளாதார நெருக்கடியை ஒன்றாக எதிர்த்து போராடுகிறோம். #WeAre With Gota” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்க்க முடியும் என ட்வீட் செய்துள்ளார்.

"உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்கிறோம். இது இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. பொங்கி எழும் வாழ்க்கைச் செலவு இலங்கையில் மட்டுமல்ல. உலகளாவிய நெருக்கடி இப்போது நம்மை பாதிக்கிறது, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


எவ்வாறாயினும் டுவிட்டரில் பயணர் ஒருவர் இந்த இரு ஹேஸ்டேக்குகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள வாக்கெடுப்பில் தற்போதுவரை 88% வாக்குகளை பெற்று #GoHomeGota ஹேஸ்டேக் முன்னிலைவகிக்கின்றது.

twit 03

 

twit 05

twit 02

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி