1200 x 80 DMirror

 
 

நிதி அமைச்சர் பெசிலை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த கருத்தை ஏற்படுத்தியவர் விமல் வீரவங்ச. பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அது ஒரு ஊக்குவிக்கின்ற ஒரு கருத்தாகும். இந்த கருத்துடன் இன்னுமொரு காரணம் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. இலங்கையினுடைய அரசியலில் ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்றே. யாராவது கேட்டால் தற்போது இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குறிப்பிடுவது அவ்வாறான சந்தர்ப்பத்தில் இல்லை என்று.

இருப்பினும் அந்தக் கேள்வியை சரியான முறையில் கேட்பது என்றால் அவ்வாறு அல்ல கேட்க வேண்டும். இந்த நாட்டினுடைய அரசியலில் ராஜபக்ஷக்களுக்கு இன்னும் சந்தர்ப்பத்தை இந்த நாட்டினுடைய மக்கள் வழங்க தயாரா என்று தான் கேட்க வேண்டும்.ஏன் என்றால் ராஜபக்சக்கள் இதனை பெற்றுக் கொள்வது மக்கள் வழங்குவதனால்தானே. அவர்களுக்கு பலவந்தமாக பெற்றுக்கொள்ள முடியாதல்லவா.அதனால் ராஜபக்சக்களை வைத்திருப்பதோ அல்லது விரட்டியடிப்பதோ சரி இதனை இந்நாட்டு மக்களே மேற்கொள்ள வேண்டும்.அந்த இடத்தில் ரட்டே ரால ராஜபக்சக்களை தனித்தனியாக பிடிப்பதில்லை.

அவ்வாறு செய்வது தவறாகும். அதில் பெசில் வேறாக , கோட்டாபய வேறாக, மஹிந்த வேறாக எடுப்பதற்கு ரட்டே ரால இணங்குவதில்லை. மொத்த ராஜபக்சக்களையுமே எடுக்க வேண்டும்.அவ்வாறு சென்றால் மீண்டும் இந்நாட்டுக்கு பிழை ஏற்படும். அவ்வாறு செய்கின்றவர்கள் செய்ய முற்படுவது மீண்டும் இந்த நாட்டை பிழையான பாதைக்கு கொண்டு செல்வதற்கே. ஏனென்றால் அவ்வாறு செய்வதன் உள்ளே ராஜபக்ஷக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மக்களுடைய கருத்துக்களின் உள்ளே மீண்டும் ஒரு ராஜபக்சக்களின் எச்சம் அரசியலில் வருவதற்கு எஞ்சி இருக்கும்,

விமல் குறிப்பிடுவது பெசிலை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றினால் பிரச்சினைகள் யாவும் முடிந்து விடும் என்று. கம்மன்பிலவும் அவ்வாறே குறிப்பிடுகின்றார்.பெசிலை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றினால் இந்த நாட்டினுடைய பிரச்சினைகள் யாவும் முடிந்துவிடுமா? விமல் அவ்வாறு குறிப்பிடுவது இன்னுமொரு ராஜபக்ஷக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு. ரட்டே ரால குறிப்பிடுவது விமல் குறிப்பிடுகின்ற அந்த கதையின் உள்ளேயே பெசிலுக்கும் பெரிய சேவையொன்று கிடைக்கும்.ரட்டே ரால குறிப்பிடுவது பெசிலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை விட்டு வெளியேற்ற தேவையில்லை என்று.

பெசில் மட்டுமல்ல எந்த ஒரு ராஜபக்ஷக்களையும் இந்த நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு இடம் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது.அவர்கள் தங்களது பயணத்தை ஆரம்பித்துவிட்டனர். உண்மையில் அந்த ஒவ்வொரு ராஜபக்சக்கள் குறித்த வரலாற்று ரீதியாக உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் சட்டத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னர் இந்த நாட்டினுடைய சட்டத்தை சரியான ஒரு நிலைக்கு கொண்டுவர வேண்டும். நாட்டுக்கு ஒரு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்று இருத்தல் வேண்டும்.பெசில் மட்டும் இந்த பிரச்சினைக்கு மாத்திரம் காரணமல்ல என்ற விடயத்தை கூற ரட்டே ராலவுக்கு பல உதாரணங்கள் உள்ளன.

2010-2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கத்தில் கெபினட்டில் இ ராஜபக்சக்கள் 3 பேர்தான் என்று விமல் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த கெபினட்டில் 5 பேர் இருக்கின்றார்கள். அவ்வாறாயின் நாமல் வந்தது பெசிலை விட்டுவிட்டா? மஹிந்த பெசிலுக்கு கூறி நாமலை நியமித்ததா? அப்படியாயின் மஹிந்த குழந்தை. அதேபோன்று கடந்த முறையை விட அதிகமான உறவினர்கள் போக்கை ராஜபக்ஷக்கள் கடைபிடிக்கின்றனர். பிரதமரின் கீழ் உள்ள நிறுவன வகைகள் சபைப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது.

அவ்வாறாயின் அவற்றுக்கு உறவினர்களை மஹிந்த நியமிப்பது பெசிலிடம் கேட்ட பின்னரா? அவ்வளவு மஹிந்த குழந்தையா? அடுத்ததாக விமல் குழந்தையைப்போன்று பெசில் அமெரிக்கா- இந்தியாவின் உபாய நுட்பத்திற்கு நாட்டை கொண்டு செல்வதாக குறிப்பிடுகின்றார். அது முற்று முழுதான தவறாகும். அமெரிக்கா இந்தியா உபாயநுட்பத்திற்குள் கொண்டு செல்வது செல்வது பெசில். அதற்கு கோட்டாபயவின் இணக்கமும் உள்ளது.ரட்டே ரால வினவுவது கோட்டாபயவை அதிகாரத்துக்கு கொண்டு வருகின்ற வழிநடாத்தலில் வழிகாட்டிகளாக இருந்தது விமலின் குழுக்கலில்லையா?

கோட்டாபய ராஜபக்ஷ குறித்து அன்று ரொபோட்டோ போன்றவர்கள் வருகை தந்து அவரை பாராட்டவில்லையா? மிலிந்த மொரகொடவை முதன்மைப்படுத்தி தேர்தல் களத்திற்கு இறங்கியது கோட்டாபய இல்லையா? இன்று மிலிந்த மொரகொடவை இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக நியமித்து இந்தியன் உபாயநுட்பத்தினுள் எம்மை கொண்டு செல்ல தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்வது கோட்டாபய இல்லையா?அப்படியெனில் ஜனாதிபதி குழந்தையா? அதனால் ராஜபக்சக்கள் ஒரு சங்கிலி போன்றவர்கள். இதனுள்ளே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொடர்பு காணப்படுகின்றது.

அதில் ஒரு சங்கிலியை கழற்றி போடுவதென்பது ஏனைய சங்கிலிகள் மீள பிறக்கும். மரத்தை பிடுங்குவதென்பது அதன் வேர்களனைத்தோடும் பிடுங்கங்கல் வேண்டும். இந்நாட்டின் முன்னமே கோட்டாபய, மஹிந்த, நாமல்,சமல், சசீந்திர காண்பிப்பது நல்ல நடத்தையையா? அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லையா? அதனால் ரட்டே ரால குறிப்பிட்ட சந்தர்ப்பத்தை விமல் எடுத்துக்கொள்ளமாட்டார்.ரட்டே ரால குறிப்பிட்டது விமலிற்கு ராஜபக்ச எதிர்ப்பின் பேச்சாளராக வர சந்தர்ப்பம் இருக்கின்றது என. இருப்பினும் விமல் அந்த இடத்திலிருந்து ஏனைய ராஜபக்சக்களை பாதுகாத்து பெசில் எதிர்ப்பை செய்வது மாத்திரமே மேற்கொள்கின்றார்.

அதாவது விமல் போன்றவர்கள் ராஜபக்சக்களுடன் செல்லுகின்ற எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இடம் ஒன்றை வைத்துக் கொண்டே செல்கின்றார்கள். இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் சிறிய கட்சி கூட்டணி 10 வும் சுயாதீனமாக செயற்படப்போவதாக குறிப்பிட்டார்கள். அந்த நிலைக்கு தற்பொழுது என்ன நடந்திருக்கின்றது? அவர்கள் எதிர்க்கட்சிக்கு வந்திருந்திருக்க வேண்டுமல்லவா. சுயாதீனமாக செயற்படுவோம் என்றே குறிப்பிட்டார்கள்.

அதற்கு என்ன நடந்தது. மஹிந்த விமலிற்கு பின்னால் சென்று ஏதோ கதைத்தார்களா? இதனால் ரட்டே ரால சொல்வது இவர்கள் மேற்கொள்ள முனைவது மீண்டும் மக்களுக்கு மணலை அள்ளி எறித்துவிட்டு அனைவரையும் நோயுடைய பெசிலின் தோளில் சுமத்திவிட்டு மீண்டும் ஒரு ராஜபக்சவிற்கான வழியை ஏற்படுத்துவதற்காகும்.அவ்வாறு வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்ட ராஜபக்ஷக்கக்கள் அக்குடும்பத்தில் இல்லை. அடுத்ததாக பெசியில், மஹிந்த கோட்டாபயவை பொம்மைகளாக மாற்றி குறித்த குற்றச்சாட்டுக்களே போதும் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்புவதற்கு. இந்த நாட்டினுடைய மக்கள் கோட்டாபய மஹிந்தவுக்கு மக்கள் ஆணையை வழங்கியது எங்கேயோ சென்றிருக்கக்கூடிய அசிங்கமான அமெரிக்காவின் பொம்மையாகுவதற்காகவா?

என்ன கேவலமான அரசியல் இது. விமல் குறிப்பிடுவது சகோதர தன்மைக்கு அவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்று. அவ்வாறாயின் இந்த இடத்தில் தவறிழைத்தவர் அவ்வாறு செய்யுங்கள் என்று கூறுபவரா அல்லது அதனை மேற்கொள்பவரா?அதனால் ராஜபக்சக்களை பிரித்து ராஜபக்ஷக்களுக்கு பின்னால் எதிர்ப்பை முற்றும் முழுதுமாக அனுப்புவதற்கு விமல் போன்றவர்கள் விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். இன்று அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும் ராஜபக்சக்களே. விமலிற்கு அதனை குறிப்பிட முதுகெலும்பில்லாததற்கு ரட்டே ராலவுக்கு ஏதும் செய்ய முடியாது.ரட்டே ரால அதனை சரியாக மேற்கொள்கின்றார். இன்று இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்குரிய பொறுப்பை ஒழுங்கு முறைப்படி பார்த்தால் முதலாவது ஜனாதிபதியும் இரண்டாவது மஹிந்தவும் மூன்றாவது பெசிலுமே காரணம்.

அதன் பின்னர் இன்னும் பலர் உள்ளனர். விமல், கம்மன்பிலவும் உள்ளடங்குவர். அடுத்த காரணமாக அமைவது இந்த இடத்தில் ஒரு சூழ்ச்சி ஒன்று இருக்கின்றது. தற்போது யாராவது சரி குறிப்பிடுவதாக இருந்தால் பெசிலை வீட்டுக்கு அனுப்பினால் இந்த பிரச்சினை நிறைவு பெறும் என்றும் அவ்வாறில்லையாயின் ராஜபக்சக்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவதன் மூலம் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் அது முற்றிலும் மக்களுடைய மனதை குழப்புகின்ற வேலையாகவே அமையும்.

ராஜபக்சக்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினாலும் இந்தப் பிரச்சினை ஒரு தசமேனும் குறையாது. பிரச்சினை தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். அந்த சந்தர்ப்பம் மீண்டும் கள்வர்களால் நிரப்பப்படுமாயின் இந்நாட்டுக்கு நடப்பதென்ன. இந்த அரசாங்கத்தின் உள்ளே களவெடுக்கக்கூடிய இடமற்றபோது வெளியிலே இறங்கி கடும் கள்வர்களுடன் இணைந்தா அடுத்த அரசாங்கத்தை ஏற்படுத்துவது. அதனால் நாட்டிற்கு உரிய வேலைத்திட்டம் தேவை என்ற கருத்தாடலை கீழுக்கு கொண்டு சென்று ராஜபக்ச விரோதத்திற்கு மாத்திரம் பிரச்சினையை மேற்கொள்வது.

தற்போதும் மீண்டும் முன்னர் இருந்த கருத்தாடலை மேல் நிலைக்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் கள்வன் வெளியில் வந்து கொண்டு மற்ற கள்வனுக்கு கையை நீட்டமுன்னர் பழையவைகள் யாவும் மறந்துவிடும். அதனால் நடைபெறுவது வெளியிலே வந்த கள்வனை பாதுகாப்பதுபோல் இவ்வளவு காலமும் இருந்த வேலைத்திட்டத்திற்கான கருத்தாடலை கீழ்நிலைக்கு செல்வதாகும். கள்வன் காட்டிய அந்த வழியிலேயே ஏனைய கள்வர்களும் பின்னால் ஓடுகின்ற செயற்பாடு தான் நடக்கும்.

இறுதியில் நடைபெறுவது மீண்டும் இவ்வாறான கீழ்தரமான அரசியல் அணிக்கு அதிகாரம் செல்வதாகும். உண்மையில் அதனை மேற்கொள்வதாக இந்த நாட்டுக்கு இறைவனுடைய அருள் தான் கிட்ட வேண்டும். இந்த இடத்தில் ரட்டே ராலவின் முன்மொழிவு விமலை விட வேறுபட்டது. ரட்டே ரால குறிப்பிடுவது கட்டாயமாக ராஜபக்ச குடும்ப ஆட்சியை வெளியேற்ற வேண்டும். இருப்பினும் அதனை செய்வதற்கு முன்னர் இந்த நாட்டினுடைய எதிர்க்கட்சி, பொருளாதாரம், அரசியல், சமூகரீதியாக பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும். தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த வேண்டும்.

அது ஒரு உடன்படிக்கைக்கு கொண்டுவரப்படல் வேண்டும். அவ்வாறு வந்த பொழுது இந்த அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டும். அதனை மக்களை நடு வீதிக்கு அழைத்து செய்ய முடியுமாயின் அதனை மேற்கொள்ள வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்கள். அதேபோன்று நாட்டினுடைய மக்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடித்த எந்த ஒருவருக்கும் நாட்டை விட்டு வெளியேறவிடாமல் சட்டத்தின் முன் கொண்டுவந்து மக்களுடைய பங்குகளை மக்களுக்கு வழங்கி களவுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

அது ராஜபக்சக்களுக்கும் பொருத்தமானது. ராஜபக்சக்களுக்கு எதிராக விரல் நீட்டும் விமலுக்கும் ஏற்புடையது.இருப்பினும் அந்த இடத்திற்கு நாட்டை தள்ளிவிட எதிர்க்கட்சியும் இன்னும் தயார் இல்லை. ஏனென்றால் அவர்களின் சூழைகளிலும் சுண்ணாம்பு இருப்பதனால் ஆகும். அதனால் ராஜபக்ச ரெஜிமேன்டைபோல எதிர்க்கட்சியும் மக்களுக்கு ஒரு கொடும் வினையாகும்.

அப்படியாயின் போய் வருகின்றேன்
கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி