பசிலின் இயலாமையை மறைத்து எம்மை குற்றம் சுமத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டார்.

“ஒரு குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணியை சரியாக நிர்வகிக்க நிதி அமைச்சர் தவறியதால் நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, பசிலின் வேலை செய்ய முடியாத நிலையை மறைத்து எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.” என அவர் கூறினார்.

நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச என்ற அவலச்சனமாக அமெரிக்கரை, அமெரிக்காவிற்கு திரும்பி அனுப்பும் வரை ஆளும் கட்யில் உள்ள சில உறுப்பினர்கள் தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் அவர் போகவிட்டால் திரத்தியடிக்கப்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
வேலை முடியாவிட்டால் வெளியேற்றுவோம் என்ற சமூக ஊடகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படு வருவம் நிலையில் உதய கம்மன்பிலவின் இந்த கருத்து வந்துள்ளது.
முன்னதாக வெளியான ஜயந்த சந்திரசிறியின் 'கெரில்லா மார்க்கெட்டிங்' என்ற படத்தின் ஒரு காட்சியும் #பன்னமு நடவடிக்கைக்கு இணையாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.சமூக ஊடக ஆர்வலர்கள் ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கு இவ்வாறு போர் தொடுத்துள்ள வேளையில், பசிலின் பதவி பறிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொஹொட்டு கட்சியின் முன்னால் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உயிருடன் இருந்திருந்தால்? கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை வரலாற்றில் மிக அதிகமாக எரிபொருள் விலையை அதிகரித்தமைக்காக அமைச்சர் காமினி லொக்குகேவை பதவி விலக வேண்டும் கேட்டுக்கொண்டிருப்பார் என அவர் சுட்டிக்காட்டினார்.

தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரையின் பேரில் டீசல் விலையை 7 ரூபாவினால் அதிகரித்தமைக்கு பொஹொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தம்மை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டிருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.நாட்டின் எரிபொருள் விலையில் இவ்வளவு பெரிய அதிகரிப்புக்கு உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வு மட்டும் காரணம் அல்ல. வேறு பல காரணிகள் பங்களித்தன. அது தொடர்பில் அவர் இதன் போது விளக்கம் அளித்தார்.

அவை,அன்னியச் செலாவணியை முறையற்ற முறையில் நிர்வகித்து ஓராண்டுக்கும் மேலாக செயற்கையாக ரூபாயை வைத்திருப்பதால் ரூபாயின் மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைய நேர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஒருபுறம், அந்நியச் செலாவணி வளங்களை தவறாக நிர்வகித்தல், நாட்டின் பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி விகிதங்களை பராமரிக்கத் தவறியது, அத்தியாவசியமற்ற இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்தது.

மேலும், உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்த போது, ​​அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது திணிக்கப்படுவதும், அதற்கான சரியான பொறிமுறையின்மையும் எரிபொருள் விலை பாரிய அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது.

“2021 மார்ச் 15 ஆம் திகதி பாரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான பொறிமுறையையும் முன்வைத்து, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திரம் நிதியமைச்சினால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இறுதியாக, பிரதமர் தலைமையிலான துணைக் குழுவுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது. துணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதற்கிணங்க, அதற்கான சட்டத்திருத்தத்திற்குத் தேவையான உரிய சட்டத்தை நாங்கள் தயாரித்து அமைச்சரவையில் முன்வைத்த போது, ​​அது நிதியமைச்சில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

உண்மையான விலை நிர்ணய நிதியத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்த சுமையை மக்கள் சுமக்க வேண்டியதில்லை.அது மட்டுமன்றி, எரிபொருள் விலையை இவ்வளவு கடுமையாக உயர்த்துவதற்குப் பதிலாக, எரிபொருளின் மீது விதிக்கப்படும் வரியின் அளவைக் குறைத்து, எரிபொருள் விலையை இவ்வளவு உயராமல் அரசு வைத்திருந்திருக்க வேண்டும்” என்றார்.

தற்போது எரிபொருளுக்கான வரி மூலம் அரசாங்கம் நாளொன்றுக்கு 750 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றது.

இந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் தேவையற்ற அரச செலவினங்களைத் துண்டிப்பதன் மூலம் இந்தச் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் தாங்கிக் கொள்ள முடிந்தது. வரியை கொஞ்சம் குறைத்திருந்தால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைத்திருக்கும். எனவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி