1200 x 80 DMirror

 
 

உக்ரேன்- ரஷ்யா யுத்தம் ஆரம்பித்து தற்போது மூன்று வாரங்கள் அண்மித்துள்ளது. தற்போதும் யுத்தம் நடைபெறுகிறது. உயிரனு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறுகின்றது. உண்மையில் யுத்தத்தினிடையே இருப்பது குரோதம். குரோதம் இருக்கக்கூடிய யுத்தமானது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நியாயத்தை உண்டுபண்ணாது. உக்ரேன் உயிர் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக ரஸ்யா ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளது.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கம் கருத்து முரண்பாடு தீவிரமடைந்த காலத்தில் அதேபோன்று நாட்டின் கிழக்கு உக்ரேனின் இரு மாவட்டங்களை சுயாதீன இராஜ்ஜியமாக ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலும், அவற்றைப் பாதுகாப்பதற்காக ரஷ்ய இராணுவத்தை அனுப்பிய சந்தர்ப்பத்திலும் புட்டினுக்கு சர்வதேச ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தது. இருப்பினும் அவர் உக்ரேனை ஆக்கிரமிக்க அனுமதி வழங்கியதும் புட்டினின் சர்வதேச அங்கீகாரம் வீழ்ச்சியடைந்தது. உண்மையில் அதற்கு ஏதுவாக அமைந்த பிரதான காரணமாக மேற்கத்திய ஊடகங்கள் மூலம் புட்டின் இரத்தத்தைக் குடிக்கின்ற ஒரு பைத்தியக்காரன் என்ற அடிப்படையில் யுத்தத்தை காரணம் காட்டி முன்வைத்தமையே ஆகும்.

மேற்கத்தேய ஊடகங்கள் யுத்தம் தொடர்பில் கதைக்கவில்லை. அதனுடைய விபரீதத்தை அவர்கள் காட்டினார்கள். இருப்பினும் யுத்தம் இடம் பெறுவதற்கு ஏதுவான காரணங்களை கதைக்கவில்லை. அவற்றை காட்டவில்லை. அதனால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இரண்டாவது மூன்றாவது வாரங்களில் உக்ரேன் ஜனாதிபதி வீரனாக மாறினார். மேற்கத்தய ஊடகங்கள் சொலன்ஸ்கியை வீரனாக காட்டியது. அது மிகைப்படுத்தப்பட்ட தன்மையுடன் கொண்டதாகும்.

உண்மையில் வீரனாக வருவதற்கு சொலன்ஸ்கி எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்று ரட்டே ரால குறிப்பிடவில்லை. சில சந்தர்ப்பங்களில் சொலன்ஸ்கி துணிச்சலான தீர்மானங்களை எடுத்தார். இருப்பினும் தீர்மானம் எடுக்கப்பட்டது யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர். இருப்பினும் ஒட்டுமொத்த பொறிமுறையின் உள்ளே அவர் தோல்வியடைந்துள்ளார்.
அங்குள்ள மக்கள் சேர் தோல்வியடைந்தது போதும் என்று குறிப்பிடுகின்றார்கள். தற்போது ரஷ்யா உக்ரேன் தொடர்பில் மத்தியஸ்தமான கருத்து வெளியில் வந்துள்ளது. அதற்கேற்ப அந்த யுத்தத்தின் முதலாவது குற்றவாளியாக அமைவது சொலன்ஸ்கியே.இரண்டாவது குற்றவாளி அமெரிக்கா உட்பட நேட்டோ,மூன்றாவதுதான புட்டினின் பக்கம் கை நீண்டுள்ளது.

ரஷ்யா உக்ரேன் தொடர்பில் ரணிலும் சிறந்த பகுப்பாய்வினை மேற்கொண்டிருந்தார். உண்மையில் சொலனஸ்கி மேற்கொண்ட இந்த ராஜதந்திர தவறுகள் காரணமாக உக்ரேன் மக்கள் உயிர்கள் மூலமாக இழப்பீடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமுற்றுள்ளார்கள். 10 இலட்சத்துக்கு மேல் அகதிகளாக இடம்பெயர்ந்து உள்ளார்கள்.கீவ்,கார்கேவ்,மரியோபோலில் கூட்டு புதைகுழிகள் வெட்டப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. அதே போன்று எந்த ஒரு தவறும் செய்யாத மக்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள். சில உக்ரேன் நாட்டவர்கள் வீரர்களைப் போன்று தங்களுடைய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்கிறார்கள்.

ரஷ்ய ராணுவத்தினர் தற்போது கீவ் நகரத்துக்கு அருகாமையில் இருக்கின்றார்கள். மூன்று பக்கத்தாலும் நகரத்தில் உள்நுழைவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இந்த ஆக்கம் எழுதுகின்ற வரை அந்த குழுவினர் நகரின் வடக்கு பக்கத்தின் மூலமாக பிரவேசித்து கொண்டிருக்கின்றார்கள். நகருக்கு தூரத்தில் இருக்கக் கூடிய குழுவினர் மூன்று கிலோ மீட்டர் அளவில் தற்பொழுது உள்ளனர். எவ்வாறு இருப்பினும் ரஷ்யா இராணுவத்தினர் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

அடுத்ததாக அவர்களுக்கு தெரியும் உக்ரேனியர்கள் அவர்களுடைய தலைநகராகிய கீவ் நகரத்தை பாதுகாப்பதற்கு உயர்ந்த பட்சமாக முயற்சி செய்கின்றார்கள் என்று. உண்மையில் அந்த இடத்தில் இரண்டு பக்கத்திலும் பாரிய அழிவுகள் ஏற்படும். விசேடமாக ரஷ்யா இந்த இடத்தில் உயர்ந்த பட்சமாக விமானத் தாக்குதலை மேற்கொள்ளலாம். அதனால் பாரிய உயிர் அழிவுகள் ஏற்படும். இரண்டு பக்கத்தில் இருக்கக்கூடிய இராணுவத்தினர் இல்லாமல் தற்போது உத்தியோகப்பற்றற்ற தகவலின்படி 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். தற்போது ரஷ்யா உக்ரேனின் மேற்கு பகுதிக்கு தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. அதாவது போலந்து பக்கத்திற்கு.உக்ரேனிற்கு தேவையான உதவிகள் அந்தப் பக்கத்தில் இருந்தே கிடைக்கின்றது.

அதேபோன்று சாதாரண மக்கள் வெளியேறுவதும் அந்தப் பக்கத்தினால்தான். இங்கு ரஷ்யா அபாய எச்சரிக்கைகளை பல தடவை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கத்தேயத்திற்கு வழங்கல் செய்யப்படும் பாதைகளுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக மேற்கத்தேய எல்லையருகே அல்லது நேட்டோ எல்லைக்கு மரண பீதியை கொண்டு சென்றுள்ளார்கள். உண்மையில் இந்த இடத்தில் போலந்து எல்லையில் தாக்குதல் ஒன்று நடைபெறும் ஆக இருந்தால் நிலைமை மேலும் மோசமடையும்.

அதே போன்று கீவ்வில் தற்போது போராட்டம் நடைபெறும் பிரதேசங்களில் உக்ரேன் இராணுவத்தினரினால் ஏற்படுத்தப்படுகின்ற அழுத்தத்தை குறைப்பதற்கும அவர்கள் அவ்உபாய நுட்பத்தை கையாளுகின்றனர். எவ்வாறு இருப்பினும் தற்போது ஒரு விடயம் வெளிப்படையாகத் தெரிகின்றது. தற்போது உக்ரேன் முழுவதுமே பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. இன்னும் தடுத்து வைத்திருக்க கூடிய அளவுக்கு பாரிய எதிர்பார்ப்பு இருப்பதாக காணவில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு எதிர்பார்ப்பு உக்ரேன் இராணுவத்தினர் மாத்திரமே. அதுவும் இராணுவத்தினரின் உள்ளத்தை நீண்டநாள் தைரியப்படுத்துவதற்கு வைத்திருப்பதற்கு முடியாது என்பதே ரட்டே ராலவின் எண்ணமாகும்.

கீவ் நகரம் வீழ்ந்ததும் அனைத்து விடயங்களும் முடிவடைந்து விடும். அது தான் இரண்டு பக்கத்தினதும் நோக்கமாக காணப்படுகின்றது.உக்ரேன் அதிகாரிக்களின் கருத்துக்களூடே அவர்களது தோல்வி குறித்து வெளியாகின்றது. அவர்களது கருத்துக்களை பகுப்பாய்வு செய்து பார்த்தால் அதனை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது. தற்போது ஒரு விடயம் வெளிப்படையாக உள்ளது. ரஷ்யா தங்களுடைய இராணுவத்தினரிற்கு எந்தவிதமான பாதிப்புக்கள்வரினும் கீவ்வை கைப்பற்றும் நோக்கோடு உள்ளார்கள்.

ரஷய்ய இராணுவத்தினர் கீவ்விற்கு 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போதே சொலன்ஸ்கியின் சத்தம் சிறிது சிறிதாக குறைவடைந்தது. சொலன்ஸ்கி கயிற்றை விழுங்கியவர் என்று குறிப்பிட முடியாது. அதற்கு கயிறு என்று குறிப்பிடுவது நியாயமற்றது. அதைவிட பெரியது ஒன்று என்றுதான் குறிப்பிட வேண்டும். இருப்பினும் இவ்வளவு பெரிய அதனை எவ்வாறு விழுங்கினார் என்று நினைத்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. எம்மவர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைக்கக்கூடிய தான். இருப்பினும் சொலன்ஸ்கி. உண்மையில் சொலன்ஸ்கிக்கு நேட்டோ மட்டுமல்ல ஐரோப்பிய சங்கமும் கைவிட்டு விட்டார்கள்.நேட்டோ இல்லையாயின் ஐரோப்பா சங்கமாவது உறுப்புரிமையை தாருங்கள் என்றே சொலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும் மேற்கத்தேயம் அது தொடர்பில் எந்த ஒன்றையும் குறிப்பிடவில்லை. அவர்கள் zoom தொழில்நுட்பம் மூலமாக தங்களுடைய பாராளுமன்றத்தில் உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதுடன் இதனை கேட்டுக்கொண்டு அதற்கு கைதட்டல்களை வழங்கியது மாத்திரமே.சொலன்ஸ்கி உள்ளிட்ட உக்ரேனை பலியடையச்செய்ய செய்வதற்கான கைதட்டல்களே அவை. உக்ரேனர இறுதியாக நேற்று முன்தினம் நேட்டோ அங்கத்துவத்தை கோரியிருந்தது. இருப்பினும் அவ்வாறு வழங்கவில்லை என்றால் தாம் ஐரோப்பாவினுள் நடுத்தர நாடாக இருக்க போவதாக அதன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கருத்தின்படி புட்டின் சரியே. அவ்வாறாயின் இவ்வளவு காலமும் அவர்கள் நடுத்தரமற்ற முறையில் தான் அவர்கள் செயற்பட்டுள்ளார்கள். நேட்டோவின் ஆட்டத்திற்கு அவர்கள் செயற்பட்டுள்ளார்கள். அவ்வாறாயின் உண்மையில் இது கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ள விடயமே. சொலன்ஸ்கிக்கு இன்னும் சிறிய சந்தர்ப்பம் இங்கு காணப்படுகின்றது. இதனை ராஜதந்திர அடிப்படையில் தீர்த்து வைப்பது. அதாவது ரஷ்யாவுக்கு தேவையான சான்றிதழை வழங்குவது. இல்லை என்றால் இன்னும் நேட்டோவின் உறுப்புரிமைக்கு நாட்டு மக்களை பலி கொடுப்பதற்கு எந்த உரிமையும் சொலன்ஸ்கிக்கு இருக்கின்றதா?

ரட்டே ரால நினைப்பது சொலன்ஸ்கி தற்போது இந்தப் பிரச்சினையை தீர்க்க முற்படல் மேற்கத்தையத்தோடு அல்ல ரஷ்யாவுடன் தான். அவ்வாறு இல்லாமல் இன்னமும் ரஷ்யாவுக்கு சவால் விடுத்து கொண்டும் ரஷ்ய ராணுவத்தினரை காட்டி அவர்களை கீழ்ப்படிய செய்யும் வகையில் இன்னும் ரஷ்யாவை கோபமடைய செய்வதாக இருந்தால், உண்மையில் சொலன்ஸ்கிக்கு அகால மரணம்தான் ஏற்படவுள்ளது என்பதனை குறிப்பிடமுடியும்.

அவர் ஏற்றுக்கொள்கின்றார் தங்களுக்கு உரிய தூண்டுகோளை வழங்கியது நேட்டோவென்று.சொலன்ஸ்கி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் நேட்டோவை கடுமையாக தாக்குகின்றார். ரஷ்யாவின் பெலோ அரசியல் கொள்கையானது மேற்கத்திய கொள்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகிறது. தங்களோடு போராட்டத்திற்கு வருகின்றவர்களை பாதுகாப்பதற்கு ரஷ்ய கடும்முயற்சியை மேற்கொள்கின்றது.யுத்தத்திற்கு முன்னால் மாத்திரமல்ல சர்வதேசத்திற்கு முன்னால் ஒன்றாக முகம் கொடுப்பதற்கு அவசியமான செயற்பாடுகளை எடுத்துள்ளது. அதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

உண்மையில் நேட்டோ கைவிடுகின்ற சந்தர்ப்பத்தில் புட்டின் மற்றும் பெலோ ரஷ்ய ஜனாதிபதி இடையே ஏற்படுத்தப்படுகின்ற இந்த பொறிமுறையானது ரஷ்யாவுடன் கூட்டிணைந்து செயற்படக்கூடியவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான ஒரு முறையாகும். ரஷ்யா நேட்டோ போன்று கைவிட்டுச் செல்வது இல்லை என்ற உறுதிமொழி இதன் உள்ளே காணப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் மேற்கத்தேய ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்ய இராணுவத்தை தோல்வியடையச் செய்ய முடியும் என்று உக்ரேன் நம்பிக்கை கொள்ள முடியாது. தற்போது நினைக்கவேண்டும் தங்களுடைய நாட்டு மக்களுடைய உயிரை மீண்டும் பலிகொடுப்பதா இல்லையா என. அவ்வாறு இல்லை என்றால் கீவ் வீழ்ந்த பின்னர் கீழப்படிதலை அறிவிக்க வேண்டியே ஏற்படும். இருப்பினும் அதை செய்வதற்கு முன்னர் சொலன்ஸ்கி என்ற ஒருவர் இருப்பாரோ இல்லையோ தெரியாது.

அவ்வாறாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி