உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அதற்கு ரஷ்ய - உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. தங்க விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரை தாண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,

இன்று, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இலங்கையிலும் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும்.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.125,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கு முன்னர் கொரோனா தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்கத்தின் விலையானது குறைவடையாத நிலையில் தற்போது உக்ரைன் - ரஷ்யா யுத்தமானது தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி