1200 x 80 DMirror

 
 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக பிரபல உணவகமான மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

மேலும் அப்பிள், லிவிஸ்,நெட்பிலிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மைக்டொனால்ட் இணைந்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள மைக்டொனால்டின் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில்,

ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில்,"உக்ரைனில் நடந்துவரும் தேவையற்ற மனித துன்பங்களை நாங்கள் புறக்கணிக்க முடியாது" என்று மைக்டொனால்ட் தெரிவித்துள்ள நிலையில்,

ரஷ்யாவில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்ததாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புடின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் என்று தெரிவித்துள்ளார் பைடன்.

"புடினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவை.

அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி