1200 x 80 DMirror

 
 

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்புக்களை அந்தநாட்டின் இராணுவம் தாக்கி அழித்துவரும் காணொலி வெளியாகி தற்போது பகிரப்பட்டு வருகின்றது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது போரை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்னும் தலைநகர் கீவ்வை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்ய இராணுவ துருப்புகள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நிக்கோலேவ் நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ துருப்புகளை அந்தநாட்டின் விரைவு தாக்குதல் படை தாக்கி அழிக்கும் காணொலி ஆதாரங்களை அந்த நாட்டு இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதேப்போல, உக்ரைனின் மற்றொரு பகுதியில் நுழைந்த ரஷ்ய இராணுவ துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் இராணுவம் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது.

இதையடுத்து இதுகுறித்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிவருகிறது.

இந் நிலையில் பெரும்பாலான உலகமக்கள் உக்ரைனிக்கு ஆதரவான குரல்களையும், உக்ரைன் இராணுவத்தின் தடுப்பு தாக்குதல் வெற்றிகளை தங்களின் வெற்றியை போல் கொண்டாடியும் வருகின்றனர்.

அதேசமயம் ரஷ்யாவின் இந்த தாக்குதல் மனோபாவத்திற்கு உலகளவில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து தலைநகர் கீவ் நகரில் தங்கி உள்ளார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் மக்களிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவிக்கையில், நான் கீவ் நகரின் பன்கோவா தெருவில் தான் தங்கியுள்ளேன். மறைந்து வாழவில்லை. யாரை கண்டும் பயமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தேசப்பற்று மிக்க இந்த போரில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்.

புடினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் கீவ் இல் தான் இருக்க போகிறேன் என அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி