முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஹிருணிகா இரும்பு பெண். அவர் குண்டர்களுக்கு அஞ்ச மாட்டார்.

அவர் மிக அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை அரச தலைவர் இல்லத்திற்கு எதிரில் நடத்தினார்.

இதன் எதிரொலியாக ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக்கழிவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது மலக்கழிவு துர்நாற்றம் வீசுகிறது” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டுக்கு முன்பாக, கடந்த 5 ஆம் திகதி இரவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்து அவரை கடுமையாக எச்சரித்ததாக ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் நிரூபா கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

மேலும் ஹிருணிகா பிமேரச்சந்திர தலைமையிலான ஐக்கிய மகளிர் சக்தியின் பெண்கள் குழு, கடந்த 5 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்னால் சென்று ஒரு ஜனநாயக ரீதியான போராட்டம் மூலம் கடிதம் ஒன்றை கொடுத்தமைக்கு, வெறிப்பிடித்த வன்முறைக் குழுவின் மூலம் எமக்கு மேற்கொள்ளப்பட்ட பதிலாடியாகவே இதை நாங்கள் கருதுகின்றோம்.

என இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி