Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் 50,000 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

T

The Leader Desk

நவம்பர் 27, 2024 • 8:39 AM

மன்னார் மாவட்டத்தில் 50,000 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 49 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
  • இவர்களில் சுமார் 2,100 பேர் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • சமைத்த உணவு ,உலர் உணவு பொருட்கள்,குழந்தைகளுக்கான பால் மா மற்றும் தேவையறிந்து நுளம்பு வலைகளையும் வழங்கி வருகிறார்.
எழுத்து அளவு:

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த சுமார்  49 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் சுமார் 2,100 பேர் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களையும் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

468396629 122121453884565053 6314040793624254496 n

-இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை முன்னெடுத்து வருகின்றார்.அவருடன் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தனும் சென்று  அவசர உதவிகளை முன்னெடுத்து வருகின்றார்.

சமைத்த உணவு ,உலர் உணவு பொருட்கள்,குழந்தைகளுக்கான பால் மா மற்றும் தேவையறிந்து நுளம்பு வலைகளையும் வழங்கி வருகிறார்.

பாதிப்புக்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற மையினால் அரசாங்கத்தின் உதவிகள் உரிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையாத நிலை காணப்பட்டதாகவும் ,தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பாதிப்புகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் அதிகரித்து காணப்படுகிறமையினால் மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு இடர் கால நிலையை கருத்தில் கொண்டு  ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

WhatsApp Image 2024 11 27 at 1.22.18 PM 1

அரசாங்கம் குறித்த விடயத்தில் அசமந்த போக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.மன்னாரை போன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

எனவே வன்னி மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட மையினால் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...