Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்துக்கு 5பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு! - அநுரகுமார

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2024 • 5:55 AM

தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்துக்கு 5பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு! - அநுரகுமார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடாக பொருளாதாரத்துக்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதாகும்.
  • அடுத்தது தகவல் தொழில்நுட்ப துறை இப்போது 1.2 பில்லியன் டொலராக இருக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை 05 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க நாட்டில் 2 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க உள்ளோம்.
  • மேம்பட்ட மனித வளத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
எழுத்து அளவு:

ஊடாக பொருளாதாரத்துக்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐந்து இலட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
"நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதை பெரிதாக்க சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக சுற்றுலாத்துறையில்  புத்துயிர் அடைய செய்யலாம்.
 
08 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதாகும்.
 
அடுத்தது தகவல் தொழில்நுட்ப துறை
 
இப்போது  1.2 பில்லியன் டொலராக இருக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை 05 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க நாட்டில் 2 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க உள்ளோம். பெண்கள், பணி பெண்களாக வௌிநாடு செல்வதை நிறுத்த வேண்டும்.
 
மேம்பட்ட மனித வளத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
 
நாட்டை விட எட்டு மடங்கு கடல் உள்ளது. இன்று, 50 சதவீத நெடுநாள் படகுகள் கரையில் குவிந்துள்ளன.
 
அதிகளவு எரிபொருளுடன் 40 நாட்கள் கடலில் இருந்து அந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு மீன் பிடித்தால் 5 முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.
 
எனவே, மீனவர்களுக்கு மானியம் வழங்கி, அந்த படகுகளை கடலுக்கு அனுப்ப திட்டம் வகுக்க வேண்டும்.
 
இந்த நாட்டு விவசாயிகள் நம் நாட்டுக்குத் தேவையான வெங்காயத்தை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளனர். எனவே வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை  இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.
 
சுற்றுலாத் தொழிலுக்குத் தேவையான அரிசி மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். வெளிநாட்டில் இருந்து வேறு எந்த அரிசியையும் கொண்டு வர மாட்டோம்" என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...