Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!

Menaka

Menaka

நவம்பர் 11, 2026 • 10:14 AM

யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'மெட்ரோ' நகர்ப்புற சொகுசுப் பேருந்து சேவையை யாழ்ப்பாண மாவட்டம் வரை விரிவுபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • முன்னோடிப் பேச்சுவார்த்தைகளும் 2027 இலக்கும் இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவையை அமல்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
  • யாழ்ப்பாணத்தின் மெட்ரோ பேருந்து சேவையை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளடன், அதற்கான அத்தியாவசிய முதற்கட்ட பணிகளை விரைவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'மெட்ரோ' நகர்ப்புற சொகுசுப் பேருந்து சேவையை யாழ்ப்பாண மாவட்டம் வரை விரிவுபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண நகரப் பகுதியில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளைக் கண்டறிதல், தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளை ஆராய்தல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பிடுதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் விசேட வீதிப் பரிசோதனையும் முன்னோடிச் சோதனை ஓட்டமும் இன்று (10) முன்னெடுக்கப்பட்டன.

முன்னோடிப் பேச்சுவார்த்தைகளும் 2027 இலக்கும்

இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவையை அமல்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தின் மெட்ரோ பேருந்து சேவையை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளடன், அதற்கான அத்தியாவசிய முதற்கட்ட பணிகளை விரைவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, இன்று இடம்பெற்ற வீதிப் பரிசோதனையின் போது தரைமட்டத் தாழ்வு தளத்தைக் கொண்ட (Low-floor) மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான வீதிகளை அடையாளம் காணல், பேருந்துகளின் தொழில்நுட்பத் தேவைகளை மதிப்பிடுதல், நகரத்தை மையமாகக் கொண்டு புதிய பேருந்து நிறுத்தங்களைக் அமைத்தல் மற்றும் அவற்றிற்கு அருகில் தனிநபர் வாகன நிறுத்துமிட வசதிகளை (Park & Ride) ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

அமைச்சரின் அறிவிப்பும் தேசியத் திட்டமும்

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து பிரதிமைச்சர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன குறிப்பிடுகையில், 10 பேருந்துகளுடன் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து சேவை தற்போது 122 பேருந்துகளைக் கொண்டு இயங்குவதுடன், மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் தற்போது உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

கொழும்பில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இத் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டு வரையிலான தேசியத் திட்டத்தின் கீழ் 'இலங்கை மெட்ரோ ட்ரான்சிட்' (Sri Lanka Metro Transit) நிறுவனத்தின் ஊடாக 100% அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...