Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இன்றும் 5 மாகாணங்களில்150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம்

T

The Leader Desk

நவம்பர் 28, 2024 • 4:05 AM

இன்றும் 5 மாகாணங்களில்150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனர்த்தங்களினால் 20 மாவட்டங்களில் 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
  • ,642 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் கூறுகிறது.
  • இந்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு அனர்த்தங்களினால் 9 பேர் காயமடைந்துள்ளனர், 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 882 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
எழுத்து அளவு:

அனர்த்தங்களினால் 20 மாவட்டங்களில் 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

80,642 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் கூறுகிறது.

யாழ்ப்பாணம், புத்தளம், கேகாலை, மன்னார், கிளிநொச்சி, இரத்தினபுரி, காலி, திருகோணமலை, பதுளை, மொனராகலை, முலத்தீவு, நுவரெலியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, அம்பாறை, வவுனியா, குருணாகல் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அனர்த்தங்களினால் 9 பேர் காயமடைந்துள்ளனர், 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 882 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 21,071 பேர் உறவினர்களின் வீடுகளிலும், 16,553 பேர் 183 முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 43,507 குடும்பங்களைச் சேர்ந்த 152,603 ​​பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கனமழை...

இதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) புயலாக உருவாகவுள்ளதாகவும் அதன் தாக்கம் காரணமாக இன்றும் 5 மாகாணங்கள் மற்றும் 2 மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (27) முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை கடற்கரையில் இருந்து கிழக்கே 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

ஐந்து மாகாணங்களில் இன்று (28) 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு மற்றும் திருகோணமலை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (27) மாலை 6 மணியளவில், குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவின் ஹதிரமுல்ல கிராம சேவையாளர் பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அந்த பகுதியில் 202 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் அறிவிப்பு வரும்வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினரை கேட்டுக்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான காலநிலை நாளை (29)க்கு பின்னர் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...