ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனீவா செல்லும் இரண்டு சகாக்கள்!ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் 2022 பெப்ரவரி 28 திங்கட்கிழமை ஜெனீவா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்னாண்டோ  இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் பலவாறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

 இந்நிலையில் தானும் சக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா செல்லவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்துள்ளார். "ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கை நாங்கள் ஜெனிவாவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

“எங்கள் ஜெனீவா விஜயத்தை தடுக்க இரகசிய நடவடிக்கை உள்ளது. எம்மை ஜெனிவா செல்வதைத் தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற வளாகத்துக்குள் பொதி ஒன்றை எடுத்துச் சென்றதாக எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை முறுத்துள்ள அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் பாராளுமன்ற அமர்வுகளின் போது தெரிவித்திருந்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி