இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மூன்று வருடங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் 28 சிறுவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு மன்னார் மேல் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி உத்தரவிட்டது.

மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 மே மாதம் மன்னார் சதொச தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் ஒரு வருடத்தின் பின்னர், இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடத்தப்பட்ட பின்னர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரும் வரை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இது தொடர்பில் ஆராய்ந்து தடையை நீக்கி உத்தரவிட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சட்டத்தரணி ரணிதா ஞானராஜின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் ஆர்.சுவதிகா ஆகியோரும், காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி) சார்பாக சட்டத்தரணி பூரத்தனி சிவலிங்கமும் ஆஜராகினர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் விசாரணையில் கலந்து கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததுள்ளது.

எனினும், ஒவ்வொரு நாளிலும் 10 பேர் மட்டுமே அகழ்வாராய்ச்சியில் நேரில் கலந்து கொள்ள முடியும் எனவும் மற்றவர்கள் 30 மீட்டர் தொலைவில் இருந்துள அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தைப் பார்வையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணி நேரமும் 10 நிமிடங்களுக்கு அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரிக்க நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவானின் நேரடிக் கட்டுப்பாட்டில் சட்டத்தரணிகள், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் அகழ்வுப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்குமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இடம்பெற்று வரும் பாரிய புதைகுழி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான முதல் அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும், பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வவுனியா மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் சதொச மனித புதைகுழியில் குற்றச் செயல் நடந்த இடம் என தீர்மானித்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190வது நாள் விசாரணையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புளோரிடாவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ், மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்து அவை கி.பி 1404 மற்றும் 1635 க்கு இடைப்பட்டவை என முடிவு செய்திருந்தது.

இந்த முடிவை களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பட்டதாரித் துறையின் பேராசிரியர் ராஜ் சோமதேவினால் கடுமையாக நிராகரிக்கப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மனிதப் புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தொல்பொருட்கள் குறித்து புதிய விசாரணைகள் தொடங்கப்படன இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புகளில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததோடு, ஒன்றாகக் கட்டப்பட்டதைப் போன்ற எலும்புகளும் வெகுஜன புதைகுழியில் காண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி