1200 x 80 DMirror

 
 

 ஜனாதிபதி மக்களிடையே சென்ற போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள “ரட்டே ரால“ அமைப்பு உண்மையில் ஜனாதிபதி மக்களிடையே செல்லுவது மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் எந்த பலனும் கிடையாது என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், பெசிலின் கபுடாஸ் வீடியோவின் பின்னர் ராஜபக்சக்களுக்கு உரிய வெளியிடப்பட்ட சிறந்த வீடியோ அதுவென்றே அனேகமானோர் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் அந்த இடத்தில் ஜனாதிபதியை விட மக்கள்தான் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள். இந்த வீடியோவானது உறுதியாக எடிட் செய்யப்பட்டதன்று. ஏன் என்றால் ஜனாதிபதியின் நெருங்கிய அமைச்சர் ஒருவரிற்குறிய செய்தி இணையத்தளத்திலும் வெளியாகியது. தகவலின் படி சம்பவம் நடைபெற்றிருப்பது காலி அக்மீமனவில். ஜனாதிபதி கடந்த வாரம் காலிக்கு சென்றவேளை மக்களிடையே சென்றுள்ளார். தற்போது ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கும் குறித்த பயணத்தை தவிர்த்திருத்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என, ஜனாதிபதி ஒருவர் மக்களிடையே செல்லுகின்ற விடயமானது வேறொன்றுக்கும் அல்ல மக்களின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கு. ஏனென்றால் அந்த விடயம் கலாசார விழுமியங்களைப் போல அதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கியத்துவமும் காணப்படுகின்றது. எங்களுடைய முன்னால் அரசர்களும்இந்தபணியைசெய்திருக்கின்றார்கள். அரசர்கள் செய்த வேலையை செய்ய முற்பட்டு வாங்கி கட்டினார்களோ என்று நினைக்க தோன்றுகின்றது.அந்த அரசர் மனப்பாங்கு அரசர்களை விட ராஜபக்சக்களுக்கு உண்டு.அரசர் மனப்பாங்கால் வாங்கிகட்டினார்களோ தெரியவில்லை.எங்களது நாட்டின் முன்னாள் அரசர்கள் சிலர் மக்களின் சுக துகரகங்களை விசாரிக்க சாதாரண மனிதர்களைப்போல் சென்றார்கள் என ஜனபிரவாத கதைகளில் உள்ளது. எவ்வாறாயினும் சரி அரசர்கள் மக்களது பிரச்சினைகளுக்கு உணர்வுபூர்வமாக செயற்பட்டுள்ளார்கள் என்பதற்கான சிறந்த கவிதையொன்றை ரட்டே ரால போன்றோர் சிறு வயதில் பாடப்புத்தகத்தில் கண்டதுண்டு. “என்னைப்போன்ற குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து, சுக துக்கம் விசாரித்து, கேட்கும் அரசர் எங்கே என கேட்ட ஞாபகம் உண்டு”. இன்று அதேபோன்றுதான் ஜனாதிபதி தங்களது கிராமத்துக்கு வருகின்றார் என்று சொன்னவுடன் எங்களுடைய நாட்டினுடைய மக்கள் அதனை பார்ப்பது அந்த வரலாற்றில் இருக்கக்கூடிய அரசர் வருவதைப் போன்று தான். அதே போன்று அவ்வாறான நேரங்களில் சிலர் சொல்லுவது அவருக்கு பின்னர் ஜனாதிபதி ஒருவர் வருவார் என்று சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம் . அந்த விசேட தன்மை காரணமாக அதிகமானவர்களுக்கு ஜனாதிபதியுடன் ஒரு சில வசனங்கள் கதைப்பதற்கு விருப்பமாக இருக்கின்றது. கையை பிடிப்பதற்கு அதே போன்று மக்களிடையே சென்று மக்களுடைய சுக துக்கங்களை பிரச்சனைகளுக்கு விடைகளை தயாரித்த ஜனாதிபதிகளும் இருந்திருக்கின்றார்கள். அந்த வேலைக்கு பெயர் பெற்ற ஜனாதிபதிகள் எங்களுடைய நாட்டில் இருந்திருக்கின்றார்கள். அவர்களது அரசியலோடு ரட்டே ராலவுக்கு உடன்பாடு கிடையாதெனினும் அவர்களிடமிருந்த குணாதிசயங்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அவ்வாறு பல சந்தர்ப்பங்களில் மக்களிடம் சென்ற ஜனாதிபதிதான் ரணசிங்க பிரேமதாஸ. அதேபோன்று அண்மைக்காலங்களில் மக்களிடையே சென்ற ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவையும் நாங்கள் அறிமுகப்படுத்த முடியும். அதே போன்று யுத்தகாலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியில் கிராமங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ சென்று அம்மக்களை தைரியப்படுத்திய பல சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. நீங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது அந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி மக்களிடையே செல்லுகின்ற போது மக்களுடைய பிரச்சினை தொடர்பில் சிறந்த விளக்கம் கொண்டவராகவே அவர் காணப்பட்டார். உண்மையில் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுடைய மனங்களை அவருக்குப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இருப்பினும் அன்று அக்மீமனயில் நடைபெற்றது அதற்கு முற்றாக மாற்றமாக உள்ளது. தற்போதைய ஜனாதிபதிக்கு மக்களுடைய மனங்களில் உள்ளவை பற்றி எவ்வித விளக்கமும் அற்றவராக இருக்கிறார் என்பது அந்த வீடியோ மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அதேபோன்று பிரச்சினை தொடர்பில், கால இடைவெளி தொடர்பில் எவ்விதமான அறிவும் அவரிடம் காணப்படவில்லை. அவர் அங்கு வாய்க்கு வருகின்ற விடயங்களை குறிப்பிடுகின்றார். உண்மையில் ஜனாதிபதி மக்களிடையே செல்லுவது மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் 5 சதத்துக்கு எந்த பலனும் கிடையாது. அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செலவுகள் உண்மையிலேயே அநியாயமாகும்.அதனால் இடம்பெறுவது ஜனாதிபதி பதவியை கேவலப்படுத்துவதாகும். மக்களது பக்கத்தில் யோசிக்கின்ற பொழுது அன்று அக்மீமனயில் மக்களது பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் நல்ல விடயங்கள் நடைபெற்றுள்ளது என்றுதான். இங்குள்ள பிரச்சினைகளை வெளிக்கொணர மக்கள் தயார் என்பதனை புலப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதியுடன் அல்ல அந்த கருத்தாடலை மக்கள் பேய்களாக இருந்தாலும் அவர்களுடனாவது அதனை முகம் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றனர். அந்த அளவுக்கு மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். இருப்பினும் இருக்கக்கூடிய கேள்வியாக அமைவது அந்த மக்களுடைய அபிலாசைகளை மக்கள் போராட்டமாக மாற்றி அமைப்பதற்கு இந்த நாட்டுக்கு அவசியமான சமூக பரிவர்த்தனை ஒன்று ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னணி நாட்டில் இல்லை என்பதாகும். அது ஒரு கதையாகும். அடுத்ததாக நேற்று முன்தினம் நடைபெற்ற அந்த சம்பவத்தில் தெளிவாக காணப்பட்ட ஒரு விடயம் உள்ளது. தங்களது பிரச்சினைகளை சொல்ல மக்கள் முன்வரினும் அந்தப் பிரச்சினைகளை கேட்பதற்கு யாரும் இன்மையே. ஜனாதிபதியிடம் மக்கள் கேள்வி கேட்கின்ற போது அவர் மாறிப்பிரண்டு கேள்விகளை கேட்கின்றார். அதனால் ரட்டே ரால எப்போதும் சொல்லுகின்ற விடயம் ராஜபக்சக்களது அடிமைமுறை சிந்தனைக்கு அந்த வீடியோ சிறப்பாக அமைந்துள்ளது. ஜனாதிபதி மக்கள் சொல்லுகின்ற பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக கேட்காமல் அவர் தன்னுடைய தலையில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு கதையை தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருக்கின்றார். உண்மையில் அந்த இடத்தில் ஜனாதிபதியுடன் கதைத்தவர்கள் தேயிலை தோட்ட விவசாயிகள். இருப்பினும் ஜனாதிபதி கூறிய பதில் வேளாண்மை செய்பவர்களுக்கான பதிலே. எமது நாட்டில் தேயிலை மேற்கொள்வோருக்கு பசளை மானியத்தின் கீழ் தேயிலைக்கான பசளை இலவசமாக வழங்கப்பட்டது என்பது ரட்டே ராலவுக்கு தெரியாது. அடுத்ததாக ஜனாதிபதி அவ்வாறு வழங்கியுள்ளார் எனின் அவற்றை குறிப்பிடுங்கள். அடுத்ததாக எந்த ஒரு விவசாயிக்கும் இந்த ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பின் இரண்டு வருடங்கள் இலவசமாக பசளை வழங்கவில்லை. அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்களும் சில மாதங்களும் கடந்து இருக்கின்றது. ஜனாதிபதி குறிப்பிடுகின்ற அடிப்படையில் கடந்த போகத்தில் பசளை இலவசமாக வழங்கப்பட்டு இருக்க வேண்டும். உண்மையில் ஜனாதிபதி குறிப்பிடுகின்ற கருத்துக்கள் பொறுப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஜனாதிபதி பெசில் போன்று இருந்தால் எவ்வாறு அமையும்? பெசிலுக்கு காகத்திற்கு கபுடாஸ் எனவும் Crews எனவும் சொல்ல முடியும். இருப்பினும் நாட்டினுடைய ஜனாதிபதிக்கு broken English கதைக்க முடியாது. இந்த நாட்டில் ஒன்று ஆங்கிலம் அல்லது சிங்களம், தமிழ் சரி இருத்தல் வேண்டும். ஜனாதிபதி அன்று அந்த இடத்தில் செய்தது பெசில் செய்தது போன்ற ஒரு வேலையாகும். தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை விவசாயிகளுக்கு வழங்குகின்ற பதிலை வழங்கியது போன்றாகும். அடுத்ததாக ஜனாதிபதியிடம் கேள்விகளை கேட்க முன்வருபவர் பிரச்சினைகள் உள்ள மனிதர்தான் என ஜனாதிபதி பார்ப்பது கிடையாது. அவரை அவர் பார்ப்பது ஒரு எதிரியாக. தங்களது அரசியல் எதிரிமூலம் பயிற்றப்பட்ட ஒருவராக அவர் அதனை பார்க்கின்றார். தங்களுடைய கேள்விகளை கேட்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் கூறியது பொய் கூற வேண்டாம் என்று. இருப்பினும் அந்த விவசாயி கைவிடவில்லை. அவர் குறிப்பிட்டது, ஜனாதிபதி உங்களுடைய பக்கமிருந்து நீங்கள் பொய் கூற வேண்டாம் என்று. எவ்வாறாக இருப்பினும் ஜனாதிபதி ஒருவர் மக்களிடையே செல்வதென்றால் மிகவும் திறந்த மனதுடன் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் தங்களுடைய தலையில் இருக்கக்கூடிய அந்த மனோபாவத்தை மக்களுக்கு சுமத்திவிட்டு வருவதென்றால் அதில் எந்த பலனும்கிடையாது. அதற்கு சிறப்பாக அமைவது அனுராதபுரம் சல்காது மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தை செய்வதுதான். அந்த முறைக்கும், இந்த முறைக்குமிடையே வேறுபாடு உண்டு என ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. இந்த இடத்தில் ஒரு விடயம் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு விவசாயம் தொடர்பான அறிவு கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிடுவது இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக பசளை வழங்கியதால் அறுவடை குறையாது என்று. ரட்டே ரால நினைப்பது ஜனாதிபதிக்கு பசளை போடுகின்ற முறை, பசளை போடும் காலம், அளவு என்பன பற்றிய அறிவு கிடையாது. அவர் நினைப்பது முன்னர் இட்ட பழைய பசளை சிறிது சிறிதாக உறிஞ்சி சேமிக்கப்பட்டு தாவரம் அதனை சேமித்து வைத்திருக்கும் என்று. இல்லாத சந்தர்ப்பத்தில் சேமித்து வைப்பது போன்று. இந்த பொறிமுறையானது தொடர்ச்சியாக நடைபெறுகின்றது என்பது அவருக்குத் தெரியாது. அவர் நினைப்பது இந்த எல்லா விடயமும் flat என்று. இறுதியாக ரட்டே ரால சொல்லுவது என்னவென்றால் அரசியல் ரீதியாக இணக்கமில்லாதுவிடினும் நாட்டினுடைய ஜனாதிபதியை அவ்வாறு அவமானப்படுத்துவது ரட்டே ராலவிற்கு விருப்பமில்லை. அந்த வீடியோவில் ஒரு விவசாயியின் பின்னால் கதைக்கின்ற பெண்களுடைய குரல் மூலமாக ஜனாதிபதி அவமானப்படுத்தப்படுவது தெளிவாக விளங்குகின்றது. ரட்டே ராலவிற்கு விளங்கிய அடிப்படையில் அவர்கள் குறிப்பிட்டது வரலாற்றில் பெற்றுக்கொண்ட அதிகப்படியான கொழுந்துகள் அறுவடையை தற்போதுதான் தாம் பெற்றுக்கொள்வதாக அவர்கள் சிரித்துக்கொண்டு ஏளனப்படுத்தினார்கள். எவ்வாறாக இருந்தபோதிலும் ரட்டே ரால ஜனாதிபதியிடம் அந்த கருத்தாடலை ஏற்படுத்திய விவசாயிக்கு நன்றியை குறிப்பிடவேண்டும். விவசாயிக்கு உண்மையான பிரச்சினையை எடுத்து செல்வதற்கான தைரியம் இருந்தது. அதே போன்று ரட்டே ரால ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வது மக்களிடையே நீங்கள் செல்லுவது சிறப்பானது. இருப்பினும் அவ்வாறு சென்ற சந்தர்ப்பத்தில் பிழையான நியமங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களிடம் நீங்கள் செல்ல வேண்டாம். மக்கள் கூறுகின்ற கேள்விகளுக்கு பிரச்சினைகளுக்கு குறைந்தபட்சம் நீங்கள் அவற்றை நல்ல ஒரு மனிதராக செவிமடுங்கள். அவ்வாறு இல்லை என்றால் நாளைய தினம் மக்களுடைய எதிர்ப்பு அதனைவிட கூடிய தாக்கம் செலுத்தக்கூடியதாக அமையும். சில சந்தர்ப்பங்களில் எதிர்ப்பின் ஆரம்ப கட்டமாக கூட இது அமையலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி