1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தினூடாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 02 படகுகளையும் அரசுடமையாக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பிரத்தியேக உடமைகளை மீள வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 21 இந்திய மீனவர்களும் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வடக்கு மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். இதன்போது கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முன்னதாக கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 56 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை, கைது செய்தது. 56 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்திய எல்லையை ஒட்டியுள்ள காரைநகர் கோவளம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் குறித்த 6 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

6 மீனவர்களையும் படகினையும் இலங்கை கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் இவர்கள் மார்ச் 4ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி