இலங்கையின் தற்போதைய நிலை மிக மோசமாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மக்கள் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

"தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது.

நாடு மீண்டு எழ முடியாத நிலையில் உள்ளது. ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவையாகும். எனவே, நாட்டையும், மக்களையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஓரணியில் உடன் திரள வேண்டும். அப்போதுதான் நாட்டை மீட்டெடுக்க முடியும்.

இல்லையேல் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும். அவ்வளவு படுமோசமான நிலைமையில் நாடு உள்ளது" - என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி