ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அழைப்பின் பேரில் தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான 2022 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவர் அங்கு சிறப்புரை ஆற்றும் போதே இதனை கூறினார்.

2009 மே, இல் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பான் கீ மூன் அமைதி, நல்லிணக்கம், நிலைமையை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக சிறிசேன கூறினார்.

" முரண்பாடுகள் எந்தவொரு பிறழ்வுகளுக்கும் விடையாக இருக்கக்கூடாது. அவ்வாறான தருணத்தில் நமக்குத் தேவைப்படுவது கட்சிகளுக்கு இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் ஆகும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு தற்போது சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் “நல்லிணக்கத்தின் நான்கு தூண்களை” அடிப்படையாகக் கொண்டு, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் மிகவும் புரட்சிகரமான மற்றும் உடனடி தீர்வு நடவடிக்கைகளை உள்ளடக்கிய நல்லிணக்க பொறிமுறைகளை செயல்படுத்துவதில் நாடு பின்வாங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான யுத்தம் காரணமாக, ஆழமாக வேரூன்றியுள்ள வடுக்களை ஆற்றுவதற்கு இன்னும் அதிக காலம் தேவை, எனவே, பொறுமை அவசியம் எனவும் அவர் அடிக்கோடிட்டார்."எங்கள் மோதல் மே 2009 இல் முடிவடைந்தது. இன்னும், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் உறுதியான அதிகாரப் பகிர்வு பொறிமுறையைக் கண்டுபிடிக்கவில்லை அல்லது சர்வதேச தரத்தின்படி எதிர்பார்க்கப்பட்ட மொத்த நல்லிணக்கத்தை நிறைவேற்றவில்லை." என்றார்.

ஜேர்மனி மற்றும் வியட்நாம் நாடுகளின் தற்போதைய நிலைமைகளை எடுத்துக்காட்டிய அவர் இலங்கையும் இது போன்ற முன்மாதிரிகளை பின்பற்றலாம் எனவும் கூறினார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி