கடந்த 9 ஆம் திகதி புதிய பயணம் என்று மொட்டுக் கட்சியினுடைய முதல் மக்கள் கூட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மொட்டுவின் ஆண்மீக தலைவர் மஹிந்த தான் புதிய பயணம் தொடர்பில் குறிப்பிட்டார்.

இந்த நாட்டை 12 வருடங்கள் ஆட்சி செய்த ராஜபக்சக்கள் மீளவும் புதிய பயணம் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டதை போன்ற வேடிக்கை வேற எதுவும் உள்ளதா? இருப்பினும் எவ்வளவு இருந்தாலும் அவர்கள் குறிப்பிடுகின்ற கதையில் ஒன்றும் இல்லாமலும் இல்லை.

9ஆம் திகதி அரங்கேறிய நாடகத்தை சரியான முறையில் நாங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தால் போக நினைக்கும் புதிய பயணம் தொடர்பில் கொஞ்சமாவதுசரி நினைத்து பார்க்க கூடியதாக உள்ளது. அவர்களுக்கு செல்லக்கூடிய பயணம் நிறைய உள்ளதாக தோன்றுகின்றது. அவற்றுள் மஹிந்த குறிப்பிடுகின்ற பயணம் எந்த பயணம் என்பது தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது.

சில சந்தர்ப்பங்களில் ரட்டே ரால காணுகின்ற பயணம் மஹிந்த குறிப்பிடுகின்ற பயணம் இல்லாமலும் இருக்க முடியும். இருப்பினும் மஹிந்தவினுடைய பழைய பயணம் எல்லாம் தற்போது இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஒன்பதாம் திகதி மஹிந்தவின் பேச்சு ஜனாதிபதியின் கதையில் நோக்குகின்ற சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவாக காணமுடிகின்றது. இவர்கள் நல்லதோ கெட்டதோ அவர்களுக்குரிய பயணத்தை ஆரம்பிக்க தயாராக உள்ளார்கள். நல்லமுறையில் செல்வதாக இருந்தால் இன்னும் இரண்டரை வருடங்களில் அவர்கள் வீட்டுக்கு போகவேண்டியதுதான். ராஜபக்சக்கள் சுயவிருப்பின் பேரில் வீடு செல்வார்கள் என்று நினைப்பவர் இந்த உலகத்தில் இருக்க முடியாது. அவ்வாறு நினைத்துப் பார்க்கக் கூடிய ஒருவர் இருந்தால் அவர் சுய புத்தி உடையவராக இருக்க முடியாது.

இருந்தபோதிலும் இந்த மாதத்தில் ராஜபக்சக்களின் சிறிய மாற்றத்தை காண முடியாமலும் இல்லை. ராஜபக்சக்களின் சிறுசிறு ஜனநாயக பண்புகள் வெளிப்பட முடியும்.

நாங்கள் கேட்டிருக்கின்றோம் தானே தாங்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு ஏற்ப தங்களுடைய இடத்தை மாற்றிக் கொள்கின்ற பச்சோந்திகள் போன்ற இனம் இருக்கின்றார்கள் என்று. இவர்களும் அந்த இனத்திற்குறிய அரசியல் பச்சோந்திகள்.

1302 RateRala1

சர்வதேச மனித உரிமைகள் மாநாடு முடிவடையும்வரை சில மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் வழிகாட்டல் என்று நேற்று பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டு வந்தார்கள். அதன் கீழ் கைது செய்யப்பட்ட சிலருக்கு பிணை வழங்கினார்கள். பிரதேச சபை தேர்தலை பயந்து அவற்றை தள்ளிப்போட்ட ராஜபக்சக்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 9ஆம் திகதி செய்த விடயத்தை பார்த்திருக்கக்கூடும்.

ரட்டே ரால தொடர்ச்சியாக அதனால்தான் சொல்லுவது ராஜபக்சக்களின் அடிமைமுறையை. இருப்பினும் மனித உரிமை மாநாடு முடிவதோடு இடைவேளையும் முடிவடைந்துவிடும். அப்போது மார்ச் மாதம் முடிவடையும் போது மீண்டும் ஒரிஜினல் ராஜபக்சக்கள் தென்பட ஆரம்பித்துவிடுவார்கள். அப்போதுதான் புதிய பயணம் சரியாக தெரியும். சரி அந்த கதையை முன்னோக்கி கூறுகின்றோம்.

ரட்டே ரால சொல்லவந்தது ராஜபக்சக்கள் செல்லவுள்ள பயணத்தையே. அதில் பிரதானமான ஒன்றுதான் மொட்டு கட்சியினுள் பெஸிலிற்கு உந்துஅளிக்கும் பயணமாகும். அதற்கு எவ்வளவு தூரம் மஹிந்தவின் ஆசீர்வாதம் கிடைக்கும் கிடைக்காது என்பது ரட்டே ராலவிற்கு தெரியாது. இருப்பினும் எந்த சந்தர்ப்பத்திலும் சரி மஹிந்தவுக்கும் வெட்ட முடியாத கையை சுருங்கவைக்கப்போவதென்பது உறுதி. இல்லையாயின் நாமலுக்கு நெளிந்து கொடுக்க முடியாமல் போகிவிடும். உண்மையில் அனுராதபுரம் கூட்டம் பெசிலினது வேலை என்பது தெளிவாக காணமுடிகின்றது. கோட்டாபயக்கு அவ்வாறான ஒரு வேலை செய்ய அவசியம் கிடையாது. மஹிந்த செய்திருந்தால் அந்த இடத்தில் செய்வது மொட்டு கூட்டுக்கட்சிகளின் வேலை. அதாவது கூட்டுக்கட்சிகளின் கூட்டம். இருப்பினும் ஒன்பதாம் தேதி அந்த இடத்தில் நடைபெற்றது தனி மொட்டுக்கட்சியின் வேலையாகும். தனி பயணம் போவதற்கு தயார் என்பதனையே பெசில் காட்டியது.மொட்டுக்கட்சி தனியே கூட்டம் ஒன்று வைப்பதற்கான உரிமை உள்ளது. இருப்பினும் மொட்டுக்கட்சி முதலில் ஜனாதிபதிதேர்தலை இலக்கு வைக்குமாயின் அந்த இடத்தில் இருப்பது மொட்டுக்கூட்டுக்கட்சிகளின் கூட்டமாகும்.

அதனால் ஒரு விடயம் தெளிவாகின்றது. 2023இல் ஜனாதிபதி தேர்தல் இல்லையென்று.அதேபோல் 2024 க்கு கோட்டாபய வரப்போவதுமில்லை. உண்மையில் வர இருக்கின்ற தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என்பது உறுதி. சில சந்தர்ப்பங்களில் அதற்கு முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் வைத்து அதற்கு மேல் பொதுத்தேர்தலை திட்டமிடவும் முடியும். ராஜபக்சக்கள் தயாராவது அதற்குத்தான்.பெசில் தயாராவதும் அதற்கே. அடுத்ததாக பிரதமர் வேட்பாளராக பெசில். பெஸிலின் மதிப்பீட்டின்படி 2023 பொதுத் தேர்தலில் அவர்களுக்கு வெற்றி கொள்ள முடியும்.

அவர் முயற்சிப்பது தனி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு. இல்லையெனின் உயர்ந்த பட்சமாக 113 அருகில் வருவதற்கு. அதனை தனியே செய்ய முடியுமாயின் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற எண்ணப்போக்கே பெசிலிடம் காணப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரும்வரை மாவட்ட மட்டத்தில் சில பிரதியுபகாரங்களை செய்து காண்பிப்பதற்கு பெஸில் இந்த வருடத்தை பயன்படுத்த முடியும்.

முதலாவது பிரதியுபகாரத்தை தான் கடந்த 9ஆம் திகதி காட்டியது. இரண்டாவது விடயம் அண்மையில் வரும். அந்த விடயம் பெசிலுக்கு பிரதி உபகாரமாக அமையலாம். அதேபோன்று எதிர்க்கட்சியின் சிலரும் பிரதியுபகாரம் செய்யவும் முடியும். இருப்பினும் ரட்டே ராலவிற்கு என்றால் அவை எந்த பிரதியுபகாரமாகவும் அமையாது.

நன்றாக கணக்கிட்டு பார்த்தால் கடந்த பொதுத் தேர்தலில் மொட்டு கட்சி 68 இலட்சம் வாக்குகளை பெற்றது. அதில் மொட்டு கட்சியினுடைய தனி வாக்கு 50 இலட்சம். 55 இருக்கமுடியும். ரட்டே ரால சொல்வது மொட்டுவின் வாக்கு வங்கியில் தற்போது இருப்பது 30 இலட்சம், அல்லது 35 மாத்திரம்தான். அப்படியாயின் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அதில் ஐயாயிரத்தை சேர்க்க முடியாதெனின் பெசில் எதற்கு?ஜொனியின் சீல் வைத்தது எதற்கு? இருப்பினும் குறித்த 5000ஐ சேர்ப்பதற்கு கஸ்டப்பட்ட அமைப்பாளர்களுக்கு வேலை கடினமாக உள்ளது புரிகின்றது. ஜொனி விசேடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல பணிஸ். எப்படியாயினும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை விலைமனுவின்றி செய்யப்படும் புதிய ஒப்பந்த த்தில் ஜொனி அதனை கவர் பண்ண கூடியதாக இருக்கும். அந்த இடத்தில் 165 மில்லியன்கள். ரட்டே ரால சொல்வது அந்த 5000 கொண்டுவரும் இயலுமை சஜித்திற்கும் உள்ளது. அனுர திசாநாயக்கவுக்கும் முடியும். அது பெசிலின் விசேட திறமை இல்லை.

இருப்பினும் பெசில் தனி மாங்காய்க்கு பொல் அடிக்கும் நபர் இல்லை. பட்டாலும் படாவிட்டாலும் அடிப்பது மா கொப்பரைக்கு. பெஸில் இந்த இடத்தில் முகவரியிட்டு காட்ட முற்படுவது வெறுப்படைந்து இருக்கின்ற மொட்டு காரர்களுக்கு. ரட்டே ரால எப்போதும் சொல்லுவது அதனை. அரசாங்கத்தில் இருந்து கழற்றிவிடப்பட்ட பெரிய கூட்டம் இடைநடுவே உள்ளார்கள். உண்மையில் அவர்களுக்கு செல்வதற்கு இடமில்லை. அவர்களுக்கு சஜித் இருக்கின்றார். அவர்கள் அனுரவிற்கு விருப்பமும் பயமும். அவர்களுக்கு கொஞ்சமாவது அருகில் இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்.இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்று சொல்வது தற்போதும் மொட்டுவின் ஏகாமிபத்தியத்தின் கீழேதான்.

எது எவ்வாறாயினும் ரட்டே ராலவிற்கு சொல்லவேண்டிய விஷேட கதை ஒன்று உள்ளது. 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பெசில் இந்த நாட்டிலுள்ள புத்திசாதூரியமான மனிதர்களுக்கு ஒரு விடயத்தை ஒப்புவித்து காட்டினார். ஒன்றுதான் சிறிய கட்சிகள் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கோழைகள் போல் ராஜபக்சக்களிடம் உள்ள அரசியல் கொடூரமாகும். அதாவது அவர்கள் இருவரும் அரசியல் மிருகங்களுக்கு அப்பால் சென்ற கீழான பரிணாமங்களை கொண்ட கீழ்த்தரமான குணங்கள சில உள்ளன.

ரட்டே ராலவுக்கு விமலிடம் இருக்கக் கூடிய அரசியல் விமர்சனத்தை தற்காலிகமாக ஒரு பக்கம் வைத்து கதைத்தால், உண்மையில் 2015இல் வீட்டுக்குச் சென்ற ராஜபக்சக்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர தினேஷ், விமல், கம்மன்பில போன்றோர் பாரிய வேலைகளை மேற்கொண்டார்கள். உண்மையில் கொடிய வினைகளை மீள நாட்டுக்கு தளரவிட்டது அவர்களே. ரட்டே ரால அந்த இடத்தில் விமலிற்கு சொல்லுவது நாட்டை திருப்ப மேற்கொண்ட பயணத்தில் பெசிலுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக முறித்தது என்ற விமர்சனமாகும். இதன் மூலம்தான் விமல்- பெஸில் கூட்டு மொட்டு கட்சியை உருவாக்கியது. அந்த இடத்தில் மொட்டு கட்சியினுடைய தேசிய அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்தது விமல் இருந்தார். அதற்காக விமல் அன்று பெஸிலுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைத்தார்கள். பின்னர் பெசில் விமலிற்கு மொட்டுவின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்காமல் ஆப்பு வைத்தார். அதுதான் பெசில்- விமல் குரோதத்தின் அடிப்படை. அக்கதையை ஒருபுறம் வைத்தால், ராஜபக்சக்கள் இன்று நாட்டுக்கு காட்டியுள்ளார்கள் தாங்கள் அதிகாரத்தை பெற்ற பின்னர் அதற்கப்பால் நடைபெறும் எந்தவொன்றும் சரிவராது என
பொதுஜன பெரமுனவில் உள்ளே கூடுதலான அவமதிப்பு அவமரியாதை ஆகியவற்றுக்கு கூடுதலாக உட்படுவது ராஜபக்சக்களை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு அதிகமாக அர்ப்பணித்த விமல் உள்ளிட்ட குழுவினரே.

உண்மையில் ராஜபக்சக்கள் என்பது தங்களை எழுந்து நிற்பதற்கு கை கொடுத்த அந்த நபர்களை காலால் உதைத்துத் தள்ளிய அரசியல் கொடூரவாதிகள் என்று தற்போது ஒப்புவித்ததைப்போல், விமல், வாசு, கம்மன்பில உள்ளிட்ட குழுவினரை அரசியல் கோழைகள் என்றும் ஒப்புவித்து விட்டார்கள். இவ்வளவு அடிக்கும்போது பேசும்போது விரட்டும்போது அதனை விட்டு வெளியே வராமல் தேசப்பிரேமிகள் என்பதாலா? ராஜபக்சக்களின் தேசாபிமானம் எந்த இடத்தில் இருக்கின்றது. தற்போது தெளிவாக விளங்குகின்றது சிறிய கூட்டுக் கட்சிகளுக்கு வேட்புமனு கிடையாது என்று. 9ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது அந்தக் கதையைக் கூறி முடித்து விட்டார்கள். தேர்தல் ஒன்று வரும்வரை சிறிய கூட்டு கட்சிகளுக்கு அவ்வாறு ஏச்சுப் பேச்சு வாங்கி இருக்கவேண்டும். இருப்பினும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு வெளியில் செல்ல வேண்டி. இல்லையென்றால் பெசில் வழங்குவதை எடுத்துக்கொண்டு ராஜபக்ஷவுடன் மீண்டும் சோரம் போவதாகும்.

அன்று விமல் ராஜபக்சக்களுடன் இணைந்து செய்த கொடுக்கல் வாங்கல் பிரை என்று தற்போது நிரூபிக்கப்பட்டு முடிந்துவிட்டது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னுடைய கட்சிக்காக ராஜபக்சக்களுடன் விமல பேரம் பேசவில்லை.மொட்டு கட்சியினுடைய மேடையில் ஏறி ஆக்கிரமித்தது தன்னுடைய விருப்பு வாக்குகளுக்காக மாத்திரம் தான். விமலின் பேரம்பேசல்முறை இருந்தது அந்த இடத்தில் மாத்திரம்தான். அன்று மொட்டு மேடையில விமல் கேட்டுக்கொண்டது ஜனாதிபதிக்கு அருகில் இருக்கக்கூடிய கதிரையை. ஜனாதிபதிக்கு முன்னர் பேசுவதற்கு.பேச்சிற்கு இவ்வளவு நேரம் தேவை என்று. விமல் அன்று கூக்குரலிட்டது கட்சிக்காக அல்ல தன்னுடைய விருப்பு வாக்குகளுக்காக. இன்று விமல் போன்றவர்களுக்கு அந்த மேடையில் ஒரு பகுதிக்கும் வருவதற்கு அனுமதி இல்லை. சென்றாலும் அரசியல் கைதி போல இருக்க வேண்டி ஏற்படும். ராஜபக்சக்களின் உள்ளத்தை சுகப்படுத்த தன்னுடைய கட்சியை தாரைவார்த்த விமல் இன்று பாரிய வேதனைக்கு உட்பட்டு உள்ளார். உண்மையில் பெசிலுக்கு தெரியும் அவர்களுக்கு செல்லக்கூடிய இடம் ஒன்றுமில்லை என்று. அதனால் கீழ் இறங்கி செல்லுவதை தவிர விடை ஒன்றும் இல்லை என்று பெசிலுக்கு தெளிவாக தெரியும்.

எது எவ்வாறு இருப்பினும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தற்போது பாரிய சவால் உள்ளது. என்னவென்று சொன்னால் தொடர்ந்தும் அதனுள் தொங்கி பிடித்துக் கொண்டு இருப்பது அல்லது வெளியிலே வந்து குறிப்பிடப்படுகின்ற புதிய கூட்டமைப்பை ஏற்படுத்துவதா என்ற சவாலாகும். சில சந்தர்ப்பங்களில் அந்த மரத்தின் கீழ் விமல் குழுவினர் இறுதியில் வரலாம். வெட்கமில்லாமல் விமல் போன்றவர்கள் அந்த மரத்தின் கிளைகளை முறித்து சாப்பிடவும் கூடும்.

இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் இவ்வாறு தாமதித்தால் அதனால் அவர்களுக்கு நடப்பது மொட்டு கட்சியின் உள்சென்று சரணடைவதை தவிர வேறொன்றுமில்லை. இறுதிநேரத்தில் வெளியிலேயே வரலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் வெளியில் வந்து கொண்டு செய்யக்கூடியதொன்றை செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஏதாவது மீதியாக இருக்குமா என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுக்கு இல்லாவிட்டாலும் கட்சி ஆதரவாளர்களுக்கு இருக்கும் என்பது தெளிவானது.

அப்படியாயின் சென்று வருகின்றேன்

இறைவன் அருள் கிட்டட்டும்.வெற்றி

இப்படிக்கு
ரட்டே ரால

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி